title

.

முகப்பு

Wednesday, September 26, 2012

யாழ்ப்பாணம் ஐந்து சந்தியில் அமெரிக்காவிற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்; பொலிஸார் பூரண ஆதரவு



முஹம்மது நபி அவர்களை இழிவுபடுத்தும் வகையில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தைக் கண்டித்து யாழ். ஐந்து சந்திப் பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.


யாழ்ப்பாணம் பெரியபள்ளி வாசலில் இருந்து ஆரம்பித்த கண்டனப்பேரணி ஐந்து சந்தியில் நிறைவடைந்தது.

இதன்போது அமெரிக்காவுக்கு எதிரான கோசங்கள் எழுப்பப்பட்டதுடன் அமெரிக்காவே எமது இறைத்தூதரை அவமதிக்காதே, அமெரிக்க அதிபர் ஒபாமா ஒழிக என்ற கோசமும் அவர்களால் எழுப்பப்பட்டது.

அத்துடன் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் உருவப் பொம்மையும் ஐந்து சந்தியில் வைத்து எரிக்கப்பட்டது.

அமெரிக்காவின் நடவடிக்கையினை கண்டித்து , எழுதப்பட்ட பல்வேறு சுலோகங்களை தாங்கியவாறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதேவேளை அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தைக் கண்டித்து நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றமை.

இங்கு பொலிஸார் பூரணபாதுகாப்பு வழங்கியிருந்ததைக் காணமுடிந்தது. எனினும் தமிழ் மக்களாலும் பல்கலை மாணவர்களினாலும் யாழில் செய்யப்படுகின்ற ஆர்ப்பபாட்டங்களுக்கு பொலிஸார் தடை உத்தரவினைப் போட்டுவரும் வேளையில் வீதியில் வைத்து ரயர் எரிப்பு மற்றும் கண்டனப் போராட்டம் போன்றவற்றிற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்த பலர் பேசிக் கொண்டதனைக் காணமுடிகின்றது.