title

.

முகப்பு

Thursday, December 11, 2014

முஸ்லிம்களும் ஊடகங்களும்



விஞ்ஞானம், அறிவியல், மருத்துவம் எனப் பலதுறைகளிலும் மனிதன் உச்சத்தை அடைந்து கொண்டே செல்கின்றான். இதில் குறிப்பாகக் கூற வேண்டுமெனில் மீடியா என்ற ஊடகத்துறை உலகில் அதிவேகமாகப் பரவியும் முன்னேறிக்கொண்டும் இருக்கின்றது. உலகளாவிய (Mass Media) ஊடகங்களில் முஸ்லிம் சமுதாயமும், இஸ்லாமும் குறிவைத்து அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இது போன்ற சூழலில் முஸ்லிம் சமுதாய மக்களுக்கு மீடியா என்றால் என்ன? அதன் அவசியம் என்ன? அதில் முஸ்லிம்களின் நிலை என்ன? மீடியாவில் எவ்வாறு நாம் தாக்கத்தை ஏற்படுத்தலாம்? என்று எடுத்துரைத்து துயில் கொண்டிருக்கும் நம் சமுதாயத்தை விழிப்படையச் செய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

மீடியா?

உலகத்தில் பரந்து இருக்கும் இதழியல்கள், தொலைக்காட்சி சேனல்கள், திரைப்படம், வீடியோ கான்ஃபிரன்சிங், இணையம், தனி நபர் பிரச்சாரம், வானொலி மற்றும் அலை வரிசைகள் எனப் பெருவாரியான மக்களைச் சென்றடையும் செய்திகள் மற்றும் இதற்குப் பயன்படும் தகவல் தொடர்புக் கருவிகள், ஜனசக்தி ஆகிய அனைத்தும் ஊடகம் (Media) என்ற கருத்தாக்கத்தில் அடக்கிவிடலாம்.

ஊடகங்களில் முஸ்லிம்கள் எவ்வாறெல்லாம் பாதிப்புக்குள்ளாக்க படுகிறார்கள், இஸ்லாம் எவ்வாறெல்லாம் தவறாகச் சித்தரிக்கப்படுகின்றது என்பது பரந்தப்பட்ட விடயம்.. மீடியாவில் இவ்வாறான தீயசக்திகளை அறிந்து ஈடுகட்ட வேண்டிய நிர்பந்தத்தில்தான் முஸ்லிம்கள் இருந்து கொண்டிருக்கின்றார்கள்.