title

.

முகப்பு

Thursday, January 23, 2014

நெல் விதைத்து புல் அறுக்கும் விவசாயிகள்

                                                                       


              நெல்லை விதைத்து புல்லை அறுவடை செய்யும் நிலைக்கு இம்முறை வட மாகாண விவசாயிகளை ஏமாற்றியுள்ளது இயற்கை.யாழ்ப்பாணம் உட்பட வட மாகாணம் முழுவதும் மழையை நம்பி காலபோக நெற்செய்கையில் ஈடுபட்ட விவசாயிகள் இம்முறை வெறுங்கையுடன் நொந்துபோயுள்ளனர். இயற்;கையை நம்பியிருந்த எம்மை அந்த இயற்கை ஏமாற்றிவிட்டது. இறுதியில் எமக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது என்கிறார்.  நாவாந்துறையைச் சேர்ந்த விவசாயி தம்பிராசா சண்முகலிங்கம்.  இவர் நாவந்துறை, ஆனைக்கோட்டை விவசாய சம்மேளன தலைவராகவும் உள்ளார்.

Tuesday, January 21, 2014

'மீற்றர நம்புரன் டிரய்வர நம்பல".......... சிக்கல்களுக்கு தீர்வாக மீற்றர் ஆட்டோ

                                   
                                                'மீற்றர் ஓட்டோல போறது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. சந்தோசமாகவும் இருக்கு ஆரம்பத்தில நான் கொழும்பு வரும்போது சில ஆட்டோ சாரதிகளின்ட ஏமாற்றுக்களுக்கு சிக்கின அனுபவங்களும் உண்டு.காரணம் எனக்கு சிங்களம் தெரியாது.'
'ஆனால் இப்போ மீற்றர் ஓட்டோ இருக்கிறதால எனக்கும் இலாபம். சாரதிக்கும் இலாபம். மீற்றர் கணக்கு பார்த்து வாடகைப் பணத்தை கேட்குது. சாரதி வாய்மூடி நிக்கிறார். சந்தோசமாக போகவேண்டிய இடத்திற்கு போய்ச்சேரலாம்'
யாழ்ப்பாணம் - நீர்வேலி பகுதியை சேர்ந்த சீலனின் கருத்து. சீலன் நாடாகமும் அரங்கியலும் ஆசிரியர். வேலை நிமிர்த்தமாக யாழ்ப்பாணத்தில் இருந்து அடிக்கடி கொழும்பு சென்று வருபவர். கொழும்பில் போக்குவரத்துக்காக வாடகை ஆட்டோவையே பயன்படுத்துபவர்.