தமிழ்த் திரைப்படம் ஒன்று முதல் முதலாக தமிழ்நாட்டின் தொன்மை நாகரிகத்தைப் படம் பிடித்துக் காட்டியுள்ளது.
சங்க காலத் தமிழர் வாழ்க்கையை இலக்கியங்களில் மட்டுமே படித்துள்ள நமக்கு அதனை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார் அறிமுக இயக்குநர் ம.செந்தமிழன். பாலை என்ற இந்தப் படம் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் ஒரு இடத்தைப் பிடித்துவிட்டது எனலாம்.
தமிழ் மண்ணின் மைந்தர்களுக்கும் வந்தேறிகளுக்கும் இடையில் நடந்த போரே படத்தின் மய்யக் கரு. வளமான நிலப் பகுதியில் வாழ்ந்துவரும் முல்லைக்குடி மக்களை வந்தேறிகளான ஆய்க்குடியினர் விரட்டி அடித்து நிலத்தைக் கவர்ந்து விடுகின்றனர். தமது சொந்த மண்ணை இழந்த மக்கள் வறண்ட பாலை நிலத்திற்கு வேறு வழியின்றி குடிபெயர்கின்றனர். அங்கு நிலவும் வறட்சியால் கடும் துன்பம் அடையும் அவர்கள் மீண்டும் தம் மண்ணை மீட்கப் போராடுவதே படத்தின் கதை.
தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளை மிக நுணுக்கமாகப் படமெங்கும் காட்சியாக்கியிருக் கிறார்கள். தொடக்கத்தில் தமிழர்களிடம் கடவுள் என்ற ஒன்று கிடையாது. அது பின்னாட்களில் நம்மீது திணிக்கப்பட்டது. அதனைச் சரியாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். அதாவது கடவுள் குறித்தோஇ கடவுள் நம்பிக்கை குறித்தோ எந்தக் காட்சியும் படத்தில் இல்லை. . ஏனென்றால் தமிழர் வாழ்வில் இல்லாத கடவுளால்தான் இன்று மதங்களும்.ஜாதிகளும் தமிழனைப் பிரித்து வைத்து நமக்குள்ளே மோதிக்கொள்ளும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. நம் சமூகத்தில் கடவுள் இல்லை என்பதைச் சொல்லவேண்டியது தமிழர் சமூக வரலாறு குறித்து எழுதுபவர்கள்இபேசுபவர்கள்இ படம் எடுப்பவர்களின் கடமை. இது