title

.

முகப்பு

Wednesday, September 5, 2012


தேர்தல் பிரச்சாரங்கள் இன்று நள்ளிரவுடன் முடிவு! வன்முறைகள் அதிகரிக்கும் அபாயம்
 
 
கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மூன்று மாகாண சபைகளுக்குமான இறுதிக்கட்ட சூறாவளி தேர்தல் பிரசார நடவடிக்கைகள் இன்று புதன்கிழமை நள்ளிரவுடன் நிறைவு பெறுகின்றது.

பிரசார நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் மாகாண சபைத்தேர்தல் சட்டதிட்டங்களை மீறுகின்றவர்களுக்கு ௭திராகக் கடுமையான நடவடிக்கைகளை ௭டுக்குமாறு திணைக்களம் பொலிஸாருக்கு பணித்துள்ளது.

கலைக்கப்பட்ட மூன்று மாகாண சபைகளுக்குமான வேட்பு மனுத்தாக்கல் ஜூலை 12 ஆம் திகதியுடன் நிறைவடைந்ததன் பின்னர் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்களின் பிரசார நடவடிக்கைகள் சூடுபிடிக்க ஆரம்பித்தன.

இந்நிலையில் மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தலின் இறுதி சந்தர்ப்பத்தின் போது வன்முறை சம்பவங்கள் அதிகரிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் ௭ச்சரிக்கை விடுத்துள்ளன

சிலாபம் நீதவான் மீது மனித மலம் தாக்குதல்



  சிலாபம் மேல் நீதி மன்றத்தின் கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த குற்றவாளி ஒருவர் கூண்டில் இருந்து வெளியே வந்து மனித மலக்கழிவு அடங்கிய பொதியை நீதவான் மீது வீசியுள்ளார். 6 வயது சிறுவன் ஒருவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.. இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு கொண்டுவரப்பட்ட போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது . கூண்டுக்கதவை திறந்த போது வெளியே வந்த குறித்த நபர் மேல் நீதிமன்ற நீதவான் மலனி குணரத்ன மீது பொதி ஒன்றை வீசினார். வீசிய பொதி சுவரில் போய் வீழ்ந்தது. பொலிஸாரினால் பொதி சோதனை செய்யப்பட்ட போது அதில் மலக்கழிவு காணப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.



முன்னேஸ்வரம் காளி கோயில் வளாகத்தில் ஆர்ப்பட்டம் நடத்தத் தடை!







 எதிர்வரும் செப்டெம்பர் 2ஆம் திகதி வரை முன்னேஸ்வரம் பத்திரகாளியம்மன் கோவில் வளாகத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் எதனையும் நடத்தக் கூடாது என சிலாபம் மாவட்ட நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

காவல்துறையினர் செய்த முறைப்பாட்டை பரிசீலித்த சிலாபம் மாவட்ட நீதிபதி ஜகத் கஹந்தகம நேற்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

முன்னேஸ்வரம் பத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த மிருக பலிபூஜை எதிர்வரும் 1ஆம் திகதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில்இ அதனை நிறுத்துமாறு ஜாதிக ஹெல உறுமய உள்ளிட்ட பௌத்த அமைப்புக்கள் கோரிக்கை முன்வைத்து  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை நினைவூட்டத்தக்கது.