வணக்கஸ்த்தலங்கள்; புனிதமானவை. இலங்கை ஜனநாயக சேசலிச குடியரசின் சட்ட யாப்பில்; மத சுதந்திரத்தை வலியுறுத்தும் 10 ஆம் சரத்து, மற்றும் நிபந்தனைகளில் இருந்து பாதுகாக்கும் 11 ஆம் சரத்து, அடிப்படை மனித உரிமைகளை பாதுகாக்கும் 15 ஆம் சரத்து போன்றவற்றின் அடிப்படையில் இலங்கை வாழ் இரண்டுகோடி மக்களுக்குள் எந்த மதத்தையும் பின்பற்றவோ, பிரசாரம் செய்யவோ, வழிபடவோ இடமுன்டு ஆனால் இன்று அவை இலங்கை பெரும்பான்மை இனத்தால் மீறப்படுகின்ற நிலை காணப்படுகிறது.
குறிப்பாக தம்புல்ல முஸ்லிம்களின் பள்ளிவாசலில் இடம்பெற்ற அடாவடித்தனம், தம்புல்ல ரன்கிரி விகாரையின் பீடாதிபதி தலைமையில் வந்த குழுவினராலேயே மேற்கொள்ளப்பட்டது. அது பௌத்த பிரதேசம் என்றும் அங்கு வேறு மதங்களின் வணக்கஸ்த்தலங்கள் இருக்கக்கூடாது என்றும் கூறப்பட்டது. இதுபோல சிலாபம் பத்ரகாளிஅம்மன் ஆலயத்தில் அதன் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு இடம்பெறவிருந்த மிருகபலி சடங்கு நிறுத்தப்பட்டது. ஏனெனில் இந்தியாவின் கபிலவஸ்த்துவில் இருந்து கொண்டுவரப்பட்ட புத்தரின் புனித சின்னங்கள் வாரியபொல எனும் பிரதேசத்தில் வைக்கப்பட்டதாகவும், அதற்கு மரியாதை செலுத்தும் முகமாகவும் மிருகபலி சடங்கை நிறுத்துமாறும் கேட்டுக் கொண்ட காரணத்தினாலேயே இப் பூசை நிறுத்தப்பட்டதாக அந்த ஆலய பிரதம பூசகர்; காளிமுத்து தெரிவித்தார். பௌத்தமத சின்னங்களை தரிசித்து அவற்றை வழிபடுவது பௌத்த மக்களின் வழிபாட்டு முறையாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறதோ, அவ்வாறே காளி தேவிக்கு மிருகபலியிடலும் இந்து மதத்தின் வழிபாட்டு முறையும் முக்கியத்துவம் வாய்ந்ததுமாக கருதப்படுகிறது. ஒரு பகுதியில் நடைபெறும் பௌத்த மத வழிபாட்டை முன்னிட்டு இன்னொரு இடத்தில் நடைபெறும் இந்துமத வழிபாட்டை நிறுத்துவது நீதிக்கு புறம்பான ஓர் விடயமாகும்.

இந்து மதம் இருவேறு விதமான வழிபாட்டு முறைகளை கொண்டுள்ளது. ஆகம விதிகளுக்கு உற்பட்ட வழிபாட்டு முறை, ஆகம விதிகளுக்கு உட்படாத வழிபாட்டு முறை. ஆகம விதிகளுக்கு உட்பட்ட வழிபாட்டு முறை வட மொழி மந்திரங்களிளான பூசை முறையை கொண்டது, இவை சிவன், பார்வதி, கனபதி ஆகிய தெய்வங்களுக்குரியவை.
காளி, கொற்றவை, நாச்சிமார், உற்பட சிறு தெய்வங்களுக்கான வழிபாட்டு முறைகள் ஆகம விதிகளுக்கு உட்படாதவையாகும். பொங்கல், விளக்குவைத்தல், காவடி, மிருகபலி கொடுத்தல் போன்றன சிறு வழிபாட்டு முறையாகும். அந்த வகையில் சிலாபம் காளி அம்மன் ஆலயமும் ஆகம விதிகளுக்குற்படாத சிறு தெய்வ வழிபாட்டிற்கு உற்பட்ட ஓர் ஆலயமாகும். இவ் ஆலயத்திலே இந்துக்களின் வழிபாட்டு முறைகளுள் ஒன்றான மிருகபலி சடங்கானது பெறும்பான்மை இனத்தினால் முடக்கப்பட்டுள்ளது. இந்துமத ஆலயங்களில் நடைபெறும் மிருகபலி என்பது ஒரு சடங்கு முறையாகும். இது தொன்மை வாய்ந்த இந்து மத சடங்குகளுடன் தொடர்புடையது. வைரவக் கடவுளுக்கும் காளி, துர்கை ஆகிய பெண் தெய்வங்களுக்கும் மிருகபலி கொடுக்கப்படுவதுண்டு. இவை மிகவும் கோபம் கொண்ட குற்றம் பொறுக்காத தெய்வங்கள் எனக்கருதப்படுவதாலேயே அவை பலிபூசைகள் மூலம் ஆற்றப்படுகின்றது..
காளி, கொற்றவை, நாச்சிமார், உற்பட சிறு தெய்வங்களுக்கான வழிபாட்டு முறைகள் ஆகம விதிகளுக்கு உட்படாதவையாகும். பொங்கல், விளக்குவைத்தல், காவடி, மிருகபலி கொடுத்தல் போன்றன சிறு வழிபாட்டு முறையாகும். அந்த வகையில் சிலாபம் காளி அம்மன் ஆலயமும் ஆகம விதிகளுக்குற்படாத சிறு தெய்வ வழிபாட்டிற்கு உற்பட்ட ஓர் ஆலயமாகும். இவ் ஆலயத்திலே இந்துக்களின் வழிபாட்டு முறைகளுள் ஒன்றான மிருகபலி சடங்கானது பெறும்பான்மை இனத்தினால் முடக்கப்பட்டுள்ளது. இந்துமத ஆலயங்களில் நடைபெறும் மிருகபலி என்பது ஒரு சடங்கு முறையாகும். இது தொன்மை வாய்ந்த இந்து மத சடங்குகளுடன் தொடர்புடையது. வைரவக் கடவுளுக்கும் காளி, துர்கை ஆகிய பெண் தெய்வங்களுக்கும் மிருகபலி கொடுக்கப்படுவதுண்டு. இவை மிகவும் கோபம் கொண்ட குற்றம் பொறுக்காத தெய்வங்கள் எனக்கருதப்படுவதாலேயே அவை பலிபூசைகள் மூலம் ஆற்றப்படுகின்றது..
ஆகவே இவ்வாறு இந்துக்கள் மத்தியில் முக்கியத்துவம் பெறும் வேள்வி பூசையானது வருடத்துக்கு ஒரு முறை நடைபெறுவதாகும். இந்துமத மக்கள் தமது வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக ஆடு, கோழி என்பவற்றை வளர்த்து பலிபூசையை நிறைவேற்ற எதிர்ப்பார்புடன் இருக்கும் போது பெரும்பான்மை இனத்தினால் அவர்களது எதிர்ப்பார்புக்கள் உடைத்தெறியப்பட்டது, இதற்கு சிலாபம் முன்னேஸ்வர ஆலயம் சான்று பகிர்கின்றது. குறிப்பாக சிலாபம் முன்னேஸ்வர ஆலயத்தில் கடந்த வருடம் பலிபூசைக்காக வைக்கப்பட்டிருந்த ஆடுகள், கோழிகள் என்பவற்றை அமைச்சர் மேவின் சில்வா தலைமையிலான குழு கடத்திச் சென்று வேள்விpபூசையை தடுத்து நிறுத்தியமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இதன் போது பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தனர். அதே போன்று இந்த வருடமும் முன்னேஸ்வர காளிகோயில் வேள்வி பூசையை தடுத்து நிறுத்தும் நோக்குடன் புத்தபிக்குகளை கொண்ட குழு ஆலயத்துக்கு முன் ஆர்ப்பாட்ட பேரணியென்றை மேற்கொண்டது. மேலும் காளிகோயிலின் மிருகபலி பூசையை தடுத்து நிறுத்துமாறு துன் ஹெலஜாதிக வியாபாரய எனும் அமைப்பின் பொதுச் செயளாளர் ஒமல்பே காசிப்ப தேரர் பொலிஸாரிடம் கோரியிருந்தார். அதுமட்டுமல்லாமல் மிருக பலி பூசையை நல்லவழியில் அல்லது கெட்டவழியில் தடுத்து நிறுத்த போவதாக அமைச்சர் மேர்வின் சில்வா சூளுரைத்திருந்தார்.
இலங்கை சோசலிச குடியரசின் சட்ட யாப்பின் மத சுதந்திரத்தை வலியுறுத்தும் 10 சரத்திற்கு முற்றிலும் மாறுபட்ட வகையில் பௌத்தமத மேலாதிக்கத்தினால் சட்டங்கள் மீறப்பட்டு ஏனைய மதங்களின் சடங்கு சம்பிரதாயங்களை மாற்றியும், அவர்களின் உணர்வுகளை துச்சமாக மதித்தும் வருகின்றன. இலங்கையில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் எந்தவொரு மதத்தை பின்பற்றவோ, பிரசாரம் செய்யவோ உரிமை உண்டு ஆனால் இன்று இவ்வாறான உரிமைகள் புதைக்கப்பட்டு வருகின்றன,
பல்லின மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் இலங்கை நாட்டில் அவ் ஒற்றுமையை சீர் குலைக்கும் வகையில் இன்று பெறும்பான்மையினத்தினால் நீதிக்கு புறம்பானதும், பிற மதங்களை இழிவுபடுத்தும் செயற்த்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அனைவரும் இது தொடர்பாக விழிப்புணர்வுடன் இருப்பது அவசியமாகும்…
0 comments:
Post a Comment