
விஸ்வரூபம் திரைப்படமானது இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தினால் 28- 01- 2013 அன்று 20 இலங்கை முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு காண்பிக்கப்பட்டது. இத் திரைப்படத்தை பார்வையிட்ட ஸ்ரீலங்கா தௌவ்ஹீத் ஜமாத்தின் பிரதித் தலைவர் எம். டீ. எம் பர்ஸான் கருத்து தெறிவிக்கையில்…..
இலங்கையை பொறுத்தமட்டிலும், சர்வதேச ரீதியிலும் விஸ்வரூபம் திரைப்படம் பாரிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. அதை தொடர்ந்து இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தினால் தற்காலிக தடை விதிக்கப்பட்டது. 28..01.2013 மாலை 7 மணியளவில் திரைப்படக் கூட்டுத் தாபனத்தினால் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு காண்பிக்கப்பட்டது. இதைப் பார்த்த பிறகு தான் இந்தியா, இலங்கையில் தற்போது நிலவக் கூடிய சூழ்நிலையில் இந்த திரைப்படம் முற்றாக தடை செய்யப்பட வேண்டும் என்ற ஒரு உறுதியான தீர்மாணத்தை எடுத்துள்ளோம்.

இந்த திரைப்படத்தில் ஆரம்பம் அரபு எழுத்தனி வாசகம் இடம் பெறுவதை போன்று இடம் இருந்து வலமாக விஸ்வரூபம் என்ற வாசகம் எழுதப்படடுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தின் மையக் கருவாக உலகத்தில் சமாதானப் பிரியர்களாகவும், உலகில் நிலமையை ஏற்படுத்தும் நாடாக அமெரிக்கா சித்தரிக்கப்பட்டுள்ளது. அதற்கு நேர்மாறாக உலகில் தீவிரவாதத்தை விதைக்க கூடிய காட்டுமிராண்டிகளாக முஸ்லிம் சமுதாயம் குறிப்பாக ஜிஹாதிய சமூகம் இந்த படத்தில் சித்தரிக்கப்படுகிறது.
படத்தின் ஆரம்பக்கட்டத்தில்

முஸ்லிம்களை USA உடைய உலக நாடுகளினுடைய பொருளாதாரத்தை குறிப்பாக வங்கிகளை கொள்ளையடிக்க கூடிய கொள்ளைக்காரர்களாக சித்திர்க்கப்படுகிறார்கள்.
அதிலும் குறிப்பாக அல்கைதாவை சேர்ந்தவர்கள், நைஜீரியாவை சேர்ந்த முஸ்லிம்கள் இந்த தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபடுபவர்களாக சித்திர்க்கப்படுகிறார்கள். இது போன்ற காடசிகள் இத்திரைப்படத்திற்குள்ளே வெளிப்படுத்தப்படுகின்றது.
உஸாமா பில்லேடனை சம்பந்தப்படுத்தியும் பராக் ஒபாமாவுடைய சில பேட்டிகளையும் இணைத்து இரண்டு விதமாக இத்திரைப்படத்தில் காட்சிப்படுத்துகிறார்கள்.
குறிப்பாக உஸாமா பில்லேடன் பயங்கரவாதி என்றும் அல்கைதா இயக்கம் பயங்கரவாத இயக்கம் என்றும் ஜிஹாதிய தீவிரவாதம் பரவி வருகின்றது என்றும் அதை தடுக்க வேண்டும் என்று ஒபாமா கூறுவதாகவும் இரண்டு கட்டங்கள் இந்த திரைப்படத்தின் இடை இடையிடையே காண்பிக்கப்படுகின்றது. இதன் மூலம் சமுதாயத்திற்கு எதிராக அதாவது ஜிஹாதிய பயங்கரவாதத்திற்கு எதிராக USA போராடுகின்றது என்ற மாயை தோற்றம் உலகத்திற்கு வெளிப்படுத்தப்படுகின்றது என்றும் முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்றும் திரைப்படத்தில் காண்பிக்கப்படுகின்றது.

குறப்பாக திருமறை குர்ரானை காட்சிப்படுத்துகிறார்கள். மீசான் பலகையை காடசிப்படுத்துகிறார்கள். முஸ்லிம்களினுடைய கலாசார ஆடை வகைகளை அதாவது இலங்கை வாழ் முஸ்லிம்கள் உலக வாழ் முஸ்லிம்கள் பயன்படுத்தக்கூடிய கலாசார ஆடை வகைகளை நீண்ட வெள்ளை ஜூப்பாக்கள் அணிகிறார்கள். நீண்ட வெள்ளை ஜூப்பா அணிவது தொப்பி அணிவது இவை எல்லாம் ஜிஹாத்திற்குரிய தீவிரவாதத்திற்குரிய சின்னங்களாக சித்திர்க்கப்படுகின்றது.
குறிப்பாக பள்ளி வாயில்கள் ஜிஹாதிய பங்கர்களாக அதாவது இலங்கையினது பெதுபல சேனா இனவாத கட்சிகள் வைக்கும் கோசத்தை போன்று பள்ளிவாயில்கள் ஜிஹாதிய களங்களாக செயற்படுகின்றன என்று அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டனர். அந்த அறிக்கையை உண்மைப்படுத்தும்; விதமாக காட்சி இந்த திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்படுகின்றது.
அதாவது சில முஸ்லீம்கள் பள்ளிவாயிலில் தொழுகையை மேற்கொள்கிறார்கள். அந்த தொழுகை முடிந்ததும் தற்கொலை தாக்குதல் நடத்தக்கூடிய காட்சிகள் படத்தில் காண்பிக்கப்படுகின்றது. இஸ்லாத்தினுடைய அடிப்படை கடமை தொழுகை இந்த தொழுகை ஜிஹாதினுடைய உணர்வை தூண்டக் கூடிய கிரிகையாக சித்தரிக்கப்படுகின்றது.
இந்த திரைப்படம் முழுவதும் சரியாக 6 இடங்களில் முஸ்லிம்கள் தொழுவது போன்று காட்சிகள் இடம் பெறுகின்றன. அந்த தொழுகை முடிந்ததும் ஒரு தற்கொலை தாக்குதலோ அல்லது ஒரு துப்பாக்கி பிரயோகமோ இடம்பெறுகின்றது. எனவே இந்த தொழுகை என்பது தீவிரவாதத்தை தூண்டக் கூடிய ஒரு அம்சமாக இந்த திரைப்படத்திலே காண்பிக்கப்படுகிறது.
முஸ்லிம்கள் மதிப்பாக வாயிலே உச்சாரணம் செய்யக் கூடிய சில திருக்குர்ஆன் வசனங்கள் இருக்கின்றன அதில் உண்ணதமான திக்ர் “அல்லாஹ_ அக்பர்” அந்த திக்ரை கூட இழிவாக பயண்படுத்துகிறார்கள். அதாவது இரண்டு பேர் தொலை பேசியில் உரையாடும் போது நாங்கள் ஒரு தாக்குதலை நடத்தப் போகிறோம் என்று கூறியதும் “அல்லாஹ_ அக்பர்” “அல்லாஹ_ அக்பர்” என்று கோசத்தை எழுப்பி தீவிரவாதத்தை உத்வேகப்படுத்தக் கூடிய வார்த்தையாக இந்த “அல்லாஹ_ அக்பர்” பல இடங்களில் பயண்படுத்தப்படுகின்றது.
முஸ்லிம் பெண்களுடைய ஹிஜாப் ஆடை, முஸ்லிம் பெண்களுடைய வாழ்க்கை என்று சொல்லாம், அந்த ஹிஜாப் என்ற ஆடையை கூட எப்படி கொச்சைப்படுத்துகிறார்கள் என்று பார்த்தால் ஒரு தற்கொலை தாக்குதல் செய்யக் கூடிய ஒரு கும்பல் முஸ்லிம் பெண்மணிகள் அணியக் கூடிய ஆடையை அணிந்து தாக்குதல் செய்கிறார்கள். எனவே முஸ்லிம் பெண்மணிகள் அணியக் கூடிய ஆடை தற்கொலை தாக்குதலுக்கு பயண்படுத்தக் கூடிய ஆடை. தீவிரவாதத்திற்கு உரியஆடை என்ற ஒரு கருத்தும் இந்த சமுதாயத்திலே விதைக்கப்படுகின்றது.
திரைப்படத்தின் பல இடங்களில் திருமறைக் குர்ஆன் கொச்சைப்படுத்தப்படுகிறது. ஒரு அமெரிக்க கைதியை தீவிரவாதிகள் கைது செய்வது போன்றும் அவருக்கு முகமூடி அணிந்து கொண்டு பின்னால் உள்ள திரையில் “ லாஹிலாஹ இல்லல்லாஹ்” என்று எழுதப்பட்டு இருக்கிறது, அதற்கு கீழ் அல்கைதா என்று எழுதப்பட்டு இருக்கின்றது, பின்னால் அல்குர்ஆன் வசனங்கள் ஓடவிடப்படுகின்றன, உடனே ஒரு தீவிரவாதி அந்த கைதியுடைய கழுத்தை அறுப்பதாக காட்சிப்படுத்தப் படுகின்றது. முஸ்லிம் என்று சொன்னாலே தீவிரவாத, காட்டுமிராண்டித்தனமான ஒரு போக்குடையவர்கள் என்று ஒரு நச்சுக் கருத்தை இந்த திரைப்படத்தில் ஆணித்தரமாக விதைக்கின்றார்கள்.
பயங்கரவாத தாக்குதலின் போது “ ரப்பனா ஆத்தினா ஹஸனதன்”… என்று செல்லக் கூடிய திருமறை குர்ஆன் வசனம் பின்னனியில் ஓடவிடப்படுகிறது, அமெரிக்காவுக்கு தீவிரவாதிகள் குறித்த செய்தியினை கடத்தியதற்காக கைது செய்த ஒரு மனிதரினை தூக்கிலிடுகிறார்கள் அல்கைதா அமைப்பினர். தூக்கிலிடும் போது ஒரு திருமறைக் குர்ஆன் வசனத்தை சொல்கிறார்கள் “ தாலகத் பிமா கத்மத் அய்தீஹி” இவர்கள் தங்களது கரங்களினால் செய்த விதியின் காரணமாக இந்த நிலையை அடைந்து விட்டார்கள் என்று வரக்கூடிய வசனத்தை பின்னனியிலே ஓடவிடுகிறார்கள். அதன் பின்னனியிலே பள்ளி வாயில்களில் சொல்லப்படக் கூடிய அதான் அஸ்ஹது “அன்லாஹிலாஹ இல்லல்லாஹ்” என்று வரக் கூடிய அதான் ஒலிபரப்பப்படுகின்றது. தூக்கிலிடப்பட்டதும் எல்லா முஸ்லிம்களும் ஒன்று கூடி, ஆப்கானில் உள்ள அந்த கிராமத்தில் “அல்லாஹ_ அக்பர்” “அல்லாஹ_ அக்பர்” என்று சொல்லக் கூடிய காட்சியும் இந்த திரைப்படத்தில் வருகின்றது. இவை எல்லாம் முஸ்லிம் மக்கள் தீவிரவாதிகள் என்று மக்கள் மத்தியில் பதிவு செய்யக் கூடிய எத்தனங்களாகவே உள்ளது.
ஜிஹாத் என்று சொன்னால் தீவிரவாதம் தான் என்று அடித்துச் சொல்லக் கூடியதாக பல வாசகங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. முஸ்லிம்களை பொறுத்தமட்டில் ஜிஹாதை ஒரு உண்ணதமான விடயமாக பார்க்கிறோம் நன்னையை ஏவி தீமையை தடுக்க கூடிய ஒரு உண்ணதமான விடயமாக ஜிஹாதை நோக்குவோம். ஆனால் ஜிஹாத் என்றாலே தீவிரவாதம் தான் என்று அந்த சொல்லையே திரிபு படுத்துவதாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.
ஊதாரணமாக ஒரு காட்சியிலே தீவரவாதிகள் கூறுகையில் நாம் அல்லாஹ்வுக்காக போராடுபவர்கள் என்று சொல்லக் கூடிய வசனங்களை பார்க்க கூடியதாக உள்ளது. ஒரு தீவிரவாத குடும்பம் அமெரிக்க தாக்குதலுக்குற்பட்டு கொலை செய்யப்படுகின்றனர், அப்போது கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் நேரம் கமலஹாசன் ஒரு வாசகம் சொல்கிறார் முஜாஹிதீன்கள் கண்ணீர் வடிக்ககூடாது, இரத்தம் தான்சிந்த வேண்டும், ஆகவே முஜாஹிதீன்கள் போராடுபவர்கள், முஸ்லிம்கள் இரத்த வெறிபிடித்தவர்கள் என்று சித்தரிக்கப்படுகின்றது.

ஷரியா சட்டத்தை கேளிக்கூத்தாக காட்டுகிறார்கள். ஷரியா சட்டம் என்பது ஈவிரக்கம் அற்ற ஒரு சட்டம் என்ற ஒரு கருத்தை திணிக்கக்கூடிய பல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது மரணதண்டனையின் போது “அல்லாஹ_ அக்பர்” கூறி மகிழ்ச்சி தெரிவிப்பது, தவறு செய்தவர்களை மல்லாக்காய் படுக்க வைத்து சவுக்கினால் இரத்தம் சொட்டச்சொட்ட அடிப்பது போன்ற காட்சிகள் வெளிப்படுத்தப்படுவதன் மூலம் இஸ்லாமிய ~ரியா சட்டம் காட்டுமிராண்டித்தனமானது என்ற கருத்தும் வெளிப்படுத்தப்படுகின்றது.
இத்திரைப்படத்தின் சாராம்சம் ஒரு செய்தியை அவர்கள் உலகிற்கு சொல்ல வருகின்றனர் அதுதான் உலகத்திலே சமாதானத்தை நிலைநாட்ட பயங்கரவாதத்தை ஒழிப்பதாக அமெரிக்கா, இஸ்ரேல் போராடுகின்றது. முஸ்லிம் நாடுகள் இதற்கு எதிராக சொயற்படுகின்றனர் என்ற கருத்து விதைக்கப்படுகின்றது.
ஆப்கானில் உள்ள முஸ்லிம்கள் ஆயுதப் பயிற்சி எடுப்பது போன்று பயிற்சியின் போது ஜோர்ஜ்டபிள்யூ புஸ்ஸின் படத்துக்கும் இஸ்ரேலில் உள்ள ஏரியல் சிரோனின் படத்துக்கும் துப்பாக்கி சுடுவது போன்று பயிற்சியை எடுத்துள்ளார்கள்.
தீவிரவாதியின் பயங்கர எதிரி ஜோஜ்டபிள்யூபுஸ் என்றும் இஸ்ரேல், அமெரிக்கா சமாதானத்துக்காக உழகை;கின்றது. தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு களமிறங்கி இருக்கின்றது. எனவே இந்த அமெரிக்கா, இஸ்ரேல் எதிராக இந்ததீவிர வாத கும்பல்கள் உருவாகி இருக்கின்றனர். அமெரிக்கர்கள் நல்லவர்கள் என்றும் சமாதானப்பிரியர்கள் என்றும் வரலாற்றை திரிவுதிரிவுபடுத்துவது போன்று முஸ்லீம்கள் ஒட்டுமொத்தமாக தீவிர வாதியாக சித்தரிப்பது போன்று காட்சிபடுத்தப்படுகின்றது.
அந்த திரைப்படத்தை நாங்கள் இலங்கையில் வெளியிடுவோமேயானால் இஸ்லாம் குறித்தும் ஜிஹாத் குறித்தும் ஒரு தப்பான அபிப்பிராயம் இந்த நாட்டில் உள்ள பல்லின சமுதாயத்துக்கு சொல்லப்படும். முஸ்லீம்களையும் இஸ்லாத்தையும் ஜிஹாத்தையும் தப்பாக விளங்கிக்கொள்வார்கள். ஏற்கனவே ~ம்பகரணக போன்ற எழுதர்தாளர்கள் அரசியல் வாதிகள் அல்ஜிஹாத் அல்காயிதா என்ற நூலை எழுதி இஸ்லாத்தில் இல்லாத பிரிவு வாதங்களை எல்லாம் ; ஜிஹாத்தின் போது வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையில் ; ஜிஹாதை சித்தரிக்க கூடிய படங்கள் வெளிப்படுமேயானால் மிகப்பெரிய பாதிப்பை முஸ்லீம் சமுதாயம் எதிர்கொள்ளும் எனவே இதை திரையிடக்கூடாது என்று நாங்கள் சொல்கின்றோம்.
இலங்கையில் இன்றைய நிலையை பொறுத்தவரையில் ஒரு இனவாத சூழ்நிலையில் நாம் வாழ்கிறோம் பொதுபலசேன சிங்கள உரிமைய, யாத்திக ஹெலஉரிமைய போன்ற பல இனவாத அமைப்புகள் முஜ்லீம்கள் பயங்கரவாதிகள் என்று சித்தரிக்க பல நடவடிக்கைகள் எடுப்பதை பார்க்க முடிகின்றது.
ஜனாதிபதி முஸ்லிம் பிரதிநிதிகளை சந்தித்த போது முஸ்லிம்களுக்ளுக்குள்ளேயே இரண்டு பிளவுகள் உள்ளது அது குறித்து நாம் கவனம் செலுத்துவோம் என்று ஜனாதிபதி கூறும் அளவுக்கு பொதுபலசேனாவின் நடவடிக்கை அமைந்துள்ளது. இந்த முறையும் விஸ்வரூபம் திரையிடப்படுமேயானால் எரிகின்ற நெருப்பில் எண்ணை வார்ப்பது போல் இருக்கும் இலங்கையின் சட்டஒழுங்குகள் பாதிக்கப்படும் வகையில் களவரமாக வெடிக்கக்கூடிய வாய்ப்பு உண்டு ஆகவே இதை திரையிடுவதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்.
இந்த திரைப்படத்தில் சென்சர் பன்னுவதற்கு எதுவும் இல்லை ஆரம்பம் முதல் இறுதி வரை முஸ்லிம்கள் தீவிர வாதிகள் என்ற கருப்பொளாக இருப்பதால் இந்த படம் தடைசெய்யப்பட வேண்டும் என்ற நிலையில் நாம் இருக்கின்றோம்.
உலகத்தின் வரலாற்றை திரிவுபடுத்த கூடியதாக விஸ்வரூபம் போன்ற திரைப்படத்தை அமெரிக்காவின் உந்துதலில் கமல் வெளியிட வேண்டும் என்றால் அதற்கு ஒரு அரசியல் பின்னணி இருக்கின்றது. அமெரிக்கா ஆசிய நாடுகளில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த வேண்டும் என்ற தேவை இருக்கின்றது. அமெரிக்கா தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்த வேண்டுமானால் அதற்கு ஒரு களம் தேவைப்படுகின்றது. ஆகவே ஆசியாவில் தீவிரவாதம் உள்ளது, அல்கைதாவின் செயற்பாடுகள் உள்ளன, பாகிஸ்தான் அதற்கு துனைபோகிறது, காஸ்மீரில் தீவிரவாதம் உள்ளது, இலங்கையில் தீவிரவாதம் உள்ளது இது போன்ற காட்சிகளை ஏற்படுத்தி சமாதானத்தை ஏற்படுத்த நாங்கள் வருகிறோம் என்று ஒரு போர்வையை ஏற்படுத்தியுள்ளது. ஆசியாவில் தமது ஆதிக்கத்தை செலுத்த அமெரிக்கா முனைகிறது அதற்கு இந்த தீவிரவாத கருத்தை விதைத்து அதற்கான களத்தை அமைக்க இப்படம் அமைகிறது. இந்த படம் திரையிடப்படுமேயானால் முஸ்லிம்களின் சக வாழ்வு, மத நல்லிணக்கம் சீர்குழைந்து சட்ட ஒழுக்கம் மாறுபடும் சாத்தியம் நூற்றுக்கு நூறுவீதம் உண்டு. ஆகவே இந்த திரைப்படத்தை திரையிட ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம் என்று தொளஹீத் ஜமாத் கூறுகின்றார். அதைமீறியும் இலங்கை அரசு இதை திரையிட அனுமதிக்குமேயானால் நாங்கள் முன்னர் அறிவித்தது போன்று அனைத்து திரையரங்குகளையும் முற்றுகையிட்டு போராடுவோம். இதன் போது முஸ்லிம்களிகளின் உணர்வுகள் தூண்டப்பட்டு அசம்பாவிதம் ஏற்படுமேயானால் இதற்கு முழுப்பொறுப்பு இலங்கையரசே ஏற்க வேண்டும்.
இன்று பல தரப்புகளில் இருந்த பல்வேறுபட்ட வாதங்கள் இத்திரைப்படம் தொடர்பாக வெளிப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றது. இதற்கு முதல் முஸ்லிம்களை தீவிர வாதிகளாக சித்தரித்து பல திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இப்படத்திற்கு மட்டும் ஏன் முஸ்லிம்கள் எதிர்க்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு வருகின்றது இதற்கான விடை கூறுவதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.
0 comments:
Post a Comment