Saturday, January 26, 2013
சோசலிச சமத்துவ கட்சியின் நுால் வெளியீட்டு விழாவிற்கு மண்டபத்தடை
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் கடந்த 20.01.2013 அன்று சோசலிச சமத்துவ கட்சியின் வரலாற்று நுால் வெளியீட்டு விழா இடம்பெற்றது. இந்நிகழ்வு சிரமத்தின் மத்தியில் இடம்பெற்றது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த சோசலிச கட்சியின் அமைப்பாளர் P.சம்மந்தன் '' இந்நிகழ்விற்காக ஏற்கணவே மண்டபத்திற்கான அனுமதியை வழங்கிய மண்டப நிர்வாகம் பின்னர், மண்டபத்தை வழங்க மறுத்துவிட்டது. காரணம் என்ன என கேட்டபோது, யாழ் மாவட்ட கட்டளை தளபதி மண்டப அனுமதிக்கு தடை வழங்கியதாக தெரிவித்தது. ஆனால் கட்டளை தளபதியிடம் கேட்ட போது, தான் அனுமதியை தடை செய்யவில்லை என கூறினார். இவ்வாறான மாறுபட்ட கருத்துக்களால் நுால் வெளியீட்டு விழாவை நிகழ்த்துவதில் சிரமம் ஏற்பட்டது. இறுதியில் இந்நிகழ்வை வீரசிங்கம் மண்டபத்தின் வாயிலில் நிகழ்த்த நேர்ந்தது. இவ்விழாவிற்கு வருகை தந்திருந்த அனைவரும் தரையில் அமர்ந்து கொண்டு நிகழ்வில் பங்கேற்றனர்.” என தெரிவித்தார்.
Subscribe to:
Posts (Atom)