Thursday, April 13, 2017
சிலாபம் பகுதியில் இன்றைக்கும் தமது ஆப்பிரிக்க வேர்களை இழக்காத சமூகம்
இலங்கையில் பன்னெடுங் காலமாகவே ஆப்பிரிக்கர்கள் குடியேறி வாழ்ந்து வந்துள்ளனர். அவர்கள் காலப்போக்கில் சிங்களவர்களுடனும்இ தமிழர்களுடனும் இரண்டறக் கலந்துள்ளனர். ஒருபுறம் சிங்கள இனவாதமும்இ மறுபுறம் தமிழ் இனவாதமும் உச்சத்தை அடைந்துள்ள இன்றைய காலத்தில்இ இந்தத் தகவல்கள் பலருக்கு உவப்பானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால்இ அதனை உறுதிப் படுத்தும் ஏராளமான சரித்திரஇ அகழ்வாராய்ச்சி சான்றுகள் கிடைத்துள்ளன.
புத்தளம் சிலாபம் பகுதியில் இன்றைக்கும் தமது ஆப்பிரிக்க வேர்களை இழக்காத சமூகம் ஒன்று வாழ்ந்து கொண்டிருக்கிறது. அவர்களது உருவத் தோற்றம் மட்டுமல்லஇ கலாச்சாரம்இ இசை கூட தனித்துவமானது. இது பற்றிஇ சில வருடங்களுக்கு முன்னர்இ தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றும்இ பிபிசி தமிழோசையும் ஆவணப் படங்களை தயாரித்திருந்தன.
Subscribe to:
Posts (Atom)