title

.

முகப்பு

Monday, October 16, 2017

May 1st Short Fillm


ஒரு சிறுவர் தொழிலாளியின் வாழ்க்கையை பிரதிபலிப்பதாக இக் குறுந்திரைப்படம் அமைந்துள்ளது . சிறுவர் தொழிலாளர்களுக்கு இது சமர்ப்பணம்

Film By Mohamed Farzan

Wetha Mahathaya Short Film



Wriiten And Driceted By Mohamed Farzan..


Sunday, October 15, 2017

666 - பார்கோடு இரகசியம்




பார்கோடு என்பதற்கு பட்டைக் குறியீடு என்று பெயர். 1948 ஆம் ஆண்டு அமெரிக்காவின் பெர்னார்டு சில்வர்  மற்றும் நோர்மன் ஜோசப் உட்லேண்ட் ஆகியோரது முயற்சியால் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது நமதூர் சில்லரைக் கடைகளில் கிடைக்கும் அற்பமான தின்பண்டங்கள் முதல் பல்பொருள் அங்காடிகளின் விலையுயர்ந்த பொருட்கள் வரை இந்த பார்கோடு குறியீட்டின் மூலமே முறைபடுத்தப் பட்டிருப்பதை நாம் காண்கிறோம். இதில் என்ன பரம இரகசியம் என்று நினைக்கிறீர்களா? ஆம் இதையும் விட்டுவைக்கவில்லை இந்த இல்லுமனாட்டி லூசிஃபர்கள்.

இலங்கையில் குடியேறிய ஆப்பிரிக்கர்கள் - ஒரு வரலாறு



இலங்கையில் பன்னெடுங் காலமாகவே ஆப்பிரிக்கர்கள் குடியேறி வாழ்ந்து வந்துள்ளனர். அவர்கள் காலப்போக்கில் சிங்களவர்களுடனும், தமிழர்களுடனும் இரண்டறக் கலந்துள்ளனர். ஒருபுறம் சிங்கள இனவாதமும், மறுபுறம் தமிழ் இனவாதமும் உச்சத்தை அடைந்துள்ள இன்றைய காலத்தில், இந்தத் தகவல்கள் பலருக்கு உவப்பானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், அதனை உறுதிப் படுத்தும் ஏராளமான சரித்திர, அகழ்வாராய்ச்சி சான்றுகள் கிடைத்துள்ளன.

புத்தளம், சிலாபம் பகுதியில் இன்றைக்கும் தமது ஆப்பிரிக்க வேர்களை இழக்காத சமூகம் ஒன்று வாழ்ந்து கொண்டிருக்கிறது. அவர்களது உருவத் தோற்றம் மட்டுமல்ல, கலாச்சாரம், இசை கூட தனித்துவமானது. இது பற்றி, சில வருடங்களுக்கு முன்னர், தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றும், பிபிசி தமிழோசையும் ஆவணப் படங்களை தயாரித்திருந்தன. இவர்கள் இலங்கையை போர்த்துக்கேயர்கள் ஆண்ட காலத்தில், அடிமைகளாக கொண்டு வரப்பட்ட மொசாம்பிக் நாட்டவரின் வம்சாவளியினராக இருக்கலாம்.