நாட்டில் சிறுவர் துஸ்பிரயோகம் அதிகரிப்பு: 6 மாதங்களில் 700 சிறுவர்கள் மீது பாலியல் வல்லுறவு
இலங்கையில் சிறுவர்கள் மீதான பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் அதிகரித்துச் செல்வதாகவும் இவ்வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் 700 சிறுவர்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
மேலும் குறித்த ஆறு மாத கால பகுதியில் சுமார் 900 பாலியல் வல்லுறவு சம்பவங்கள்
பதிவாகியுள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த வருடம் 1700 துஸ்பிரயோகச் சம்பவங்கள் பதிவானதாகவும் அதில் 1160இ சிறுவர்கள் மீதான பாலியல் வல்லுறவுச் சம்பவங்களும் துஸ்பிரயோகங்களும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
கணினிஇ இணையம்இ தொலைபேசி வளர்ச்சி இந்த பாலியல் வல்லுறவுச் சம்பவங்களுக்கு சில காரணிகளாக உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறுவர்கள் பெரும்பாலும் அவர்களுது நெருங்கிய உறவினர்கள்இ அயலவர்கள்இ தெரிந்தவர்களால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment