title

.

முகப்பு

Saturday, October 4, 2014

பில்லி, சூனியம் எல்லாம் வெறும் பீலாதானா?

.
'பில்லி சூனியத்தால் ஒருவரை அழிக்க முடியும் என்பது பொய்' என்றும்  தனக்கு பில்லி சூனியம் வைத்து அதை உண்மையென நிரூபிப்பவர்களுக்கு 50 லட்சம் பரிசு தரப்போவதாகவும் சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் ஜெய்னுலாபிதீன். அவருடைய அழைப்பை ஏற்று '48 நாட்களில் ஜெய்னுலாபிதீன் பில்லி சூனியம் உண்மை என்பதை ஒப்புக்கொண்டு அறிக்கை விடுவார்இ அல்லது தற்கொலை செய்துகொள்வார்' என்ற அறிவித்துவிட்டு ஜெய்னுலாபிதீனுக்கு பில்லி சூனியம் வைத்தார் திருச்சியைச் சேர்ந்த 'அகோரி' மணிகண்டன். 48 நாட்களுக்குள் இந்த விஷயங்கள் நடக்கும் என்றும்இ ஒருவேளை நடக்காவிட்டால் பில்லி சூனியம் இவையெல்லாம் பொய் என்பதை ஒப்புக்கொண்டு 'அகோரி' மணிகண்டன் இஸ்லாம் மதத்தைத் தழுவுவதுடன் பில்லி சூனியத்திற்கு எதிராக பகிரங்கமாகப் பிரசாரம் செய்வார் என்று இருதரப்பும் ஒப்பந்தம் போட்டிருந்தார்கள். இந்த ஒப்பந்தத்தின் இறுதிநாள் செப்டம்பர் 17 அன்று முடிந்தது. என்ன ஆனார் ஜெய்னுலாபிதீன்? என்ன ஆச்சு சவால்?