கடளுணவுகளில் அதிக வரு மானத்தை தரக்கூடிய ஒரு கடளுணவாக கடல் அட்டை காணப்படுகிறது. உள்ளுர் சந்தையில் இதற்கான சந்தை வாய்ப்பு குறைவாக உள்ள போதும் அதிகமாக வெளி நாட்டு ஏற்றுமதியை நோக்காக கொண்டே இதன் உற்பத்தி காணப்படுகிறது. வட மாகாணத்தை உள்ளடக்கிய கடற்பரப்பிலேயே அதிகளவு கடல் அட்டைகள் பிடிக்கப்படுகின்றன.
போர்க் காலச் சூழலில் இதன் உற்பத்தி மற்றும் கடளுக்குச் சென்று அட்டைகளை பிடித்துவரக்கூடிய சூழல் குறைவாக இருந்தமையினால் அதன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி குறைவாகவே இருந்தது. தற்போது வடமாகாணத்தில் சுதநதிரமான ஒரு நிலமை காணப்படுவதனால் கடல் அட்டைகளை கடளுக்கு சென்று பிடிக்க ஏதுவான ஒரு சூழல் காணப்படுகிறது. இக் கடல் அட்டைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதனால் நாட்டின் அந்நியச் செலாவணி அதிகரிப்பதோடு உள்ளுர் தொழிளாளர்களுக்கான வேலைவாய்ப்பும் அதிகரிக்கின்றது. இழுவைப்படகுகளாளும், சூழியோடுவதனாளும் கடல் அட்டைகள் பிடிக்கப்படுகின்றன.
சூழியோடி கடல் அட்டைகள் பிடிப்பவர்கள் 5 அல்லது 8 பேர் கொண்ட குழுவாக காலையில் கடளுக்குள் இறங்குவார்கள். சுமார் 10 அடி, 15 அடி ஆழத்துக்குள் சூழியோடி கடல் அட்டைகள் பிடிக்கப்படுகின்றது. சூழியோடி கடல் அட்டை பிடிப்பவர்களுக்கு நீரியல் வள திணைக்களத்தினால் அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. சூழியோடும் திறமையுள்ளவர்களாயும் அதிக நேரம் கடளில் மூச்சை கட்டுப்படுத்தி நீருக்குள் சூழியோடக்கூடியவர்களால் மட்டுமே கடல் அட்டைகளை பிடிக்க முடிகின்றது. குறிப்பாக கடல் அட்டைகள் அதன் அளவிற்கேற்ப 1000ரூபா, 800ரூபா, 500ரூபா விளைப்படும்.
கடலில் இருந்து பிடித்து வரும் அட்டைகளை மொத்த வியாபாரிகளுக்கு விற்பனை செய்யக் கூடியதாக உள்ளது என்று குருநகரை சேர்ந்த கடல் அட்டை பிடிக்கும் சத்திய மூர்த்தி கூறுகிறார். அதிக வருமானத்தை தரக்கூடிய ஒரு கடளுணவாக கடல் அட்டை காணப்படுகிறது. இத் தொழிலை ஊக்குவிப்பதற்காக பல தனியார் நிறுவணங்கள் ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
கடல் அட்டை வளர்ப்பு தொடர்பாக யாழ்ப்பாணத்தில் வருமானத்தை அதிகரிக்க செய்யும் கடலட்டை கடற்தொழில் அபிவிருத்தி சங்க தலைவர் யுலியன் சஹாயராஜா கூறுகையில் 2011 ஆம் ஆண்டு 'ஜெய்க்கா' என்ற நிறுவனத்தின் நிதிஉதவியுடன் கடல் அட்டை வளர்ப்பு ஆரம்பிக்கப்பட்டது. ஒரு கடல் அட்டை 10 ரூபா வீதம் கொள்வனவு செய்யப்பட்டு மொத்தமாக 1350 அட்டைகள் போடப்பட்டன. இருந்த போதும் அவை பருவ காலத்தை அடைகின்ற நேரத்தில் அதன் மூலமாக பயன் கிடைக்காமல் போய்விட்டது. அதாவது சந்தைப்படுத்தப்படவில்லை. அதனை தொடர்ந்து அட்டை வளர்ப்பு இடைநிறுத்தப்பட்டது. அத்துடன் குருநகர் பிரதேசத்திலே இறால், நண்டு வளர்ப்பிற்கான கடல் வளம் இல்லை. கடல் அட்டை வளர்ப்பில் பயண்பெறு காலம் ஆகக் கூடுதலாக 9 மாதங்கள், 6 மாதங்களிலேயே சந்தைப்படுத்துவதற்கான பருவநிலையை அடைந்துவிடும். ஒரு கடல் அட்டையானது 8 அல்லது 9 முழ நீளமானதாக காணப்படும்.
கடலட்டையானது பலதரப்பட்ட விலைகளிலே சந்தைப்படுத்தப்படு கின்றது. குறிப்பாக ரூபா 300 தொடக்கம் 1000 ரூபா வரை கொள்வனவு செய்யப்படுகின்றது. சுழியோடி அட்டைபிடிப்பவர்கள் குறிப்பாக ஜப்பசி மாதம் தொடக்கம் ஏப்ரல் வரை தங்கள் தொழிலை மேறகொண்டு வருகின்றனர். முக்கி யமாக சூழியோடத் தெரிந்தவர்களே இதனை மேற்கொண்டு வருகின்றனர். ஏனைய கடல் உணவுப்பொருட் களுக்கான கேள்வி 10 மடங்கு 20 மடங்கென அதிகரித்து செல்கின்ற போதிளும் இதற்கான கேள்வி மாற்றமின்றி காணப்படுகிறது. யாழ்ப்பாண மக்கள் ஏனைய கடளுணவுகளை அதிகமாக உற்கொள்கின்ற போதும் கடல் அட்டையினை தமது உணவில் சேர்த்துக் கொள்ள விருப்பமின்றி இருக்கின்றார்கள். ஆனால் சர்வதேச நாடுகளில் குறிப்பாக சீனர்கள், மலேசியர்கள் அதிகமாக கடல் அட்டைகளை விரும்பி உண்பதனால் அதற்கான சந்தை வாய்ப்பு அதிகமாக காணப்படுகின்றது எனவும் கடற்தொழிளாளர்களுக்கான வசதிகளை நாங்கள் ஏற்படுத்திக் பொடக்கின்றோம். அவர்களுக்கு கிடைக்கின்ற வருமானத்திலே 10 வீதமான தொகையை சங்கத்துக்கு செலுத்துகின்றாhர் எனவும் தெரிவிக்கின்றார்.
யாழ்.மாவட்டத்திலே பிடிக்கப்படகின்ற கடல் அட்டை யானதுமொத்தமாக கொள்வனவு செய்யப்பட்டு பதனிடப்பட்ட பின்னர் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது. இந்ந செயற்பாடகளினை 'சுகந்' இன்ரர் நஷனெல் பிறைவேற் லிமிடட் என்ற நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது. அந்த நிறுவனத்தின் உத்தியோகத்தர் ஜெ. ஸ்ரீபன் தெரிவிக்கையில் மாதந்தோரும் 800 கிலோகிராம் வரையான கடல் அட்டைகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. அவை பின்னர் பொதி செய்யப்பட்டு சீனா, மலேசியா போன்ற நாடுகளிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது இலங்கையின் காசுப்பெறுமதிக்கு ரூபா18,000 ஆக விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றார்.
கடல் அட்டைகள் பதனிடல் செயன்முறை தொடர்பாக கருத்துக் கூறுகையில் கொள்வனவு செய்யப்டுகின்ற கடல் அட்டைகள் நீர் நிரம்பிய பெரிய பாத்திரங்களிலே போடப்பட்டு 'குடல் இறக்கல்' என்ற செயற்பாடு முதலில் மேற்கொள்ளப்படும். இதன் போது அட்டையின் செதில்கள் அகற்றப்படுகின்றன. தொடர்ந்து பெரிய சூலைகளில் தாச்சிகள் வைக்கப்பட்டு அதில் அட்டைகளை இ;ட்டு அவிக்கின்றனர். அதன் தொடர்ச்சியாக 'உப்படித்தல்' என்ற செயன் முறை இடம்பெறும் இதன் போது பெரிய பாத்திரங்களிலே அவிக்கப்பட்ட அட்டைகளை இட்டு அதனுடன் உப்பினை கலந்து ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் ஊரிடுகின்றனர். இதன் பின்னர் ஊரவிடப்பட்ட அட்டைகளில் படிந்திருந்த சுண்ணாம்பு பிறஸ் கொண்டு அகற்றப்படும். அதன் தொடர்ச்சியாக மீண்டும் கடல் அட்டைகள் சூளையில் வைத்து அவிக்கப்பட்டு இறுதியாக தரையிலே காயவிடப்பபடுவதுடன் பதனிடல் செயற்பாடகள் நிறைவடையும். அதன் பின்னர் பயண்படுத்தக் கூடிய அந்த கடல் அட்டைகளை உறைப்பைகளிலே பொதி செய்து கொழும்பிற்கு அனுப்பிவைக்கிறோம் எனவும் தெரிவித்தார்.
யாழ் மாவட்டத்திலே Dico Brown அல்லது நூல்நரி, நரியட்டை, Smad Fish . Curry Fish அல்லது பாகற்காய் என்ற பெயர் கொண்டு அழைக்கப்படும் பலதரப்பட்ட கடல் அட்டைகள் பிடிக்கப்படுவதுடன் அவை கொள்வனவு செய்யப்பட்டு பதனிட்ட பின்னர் பாவனைக்காக ஏற்றுமதி செய்யப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களத்தின் அனுமதியுடன் குறிப்பிட்ட அளவானோரே இவ்வளர்ப்பில் ஈடுபடுவதுடன், அதனை பிடித்து சந்தைபடத்துவதனையும் தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையிலே இந்த கடலட்டைக்கான ஏற்ற சந்தை வாய்ப்பு அதிகமாக இருக்கின்ற தன்மையினை கருத்தில்கொண்டு தொழிளார்களை ஊக்குவிப்பது மட்டுமல்ல கடல் அட்டை வளர்ப்பிற்கு ஏற்ற கடற் பிரதே சங்களை தெரிவு செய்து அதற்கான வழிவகைகளை செய்தல் போன்ற விடயங்களை அதிக கரிசனையோடு செய்வதனால் மாகாண ரீதியான பொருளாதாரத்தை மேம்படுத்தலை மேற்கொண்டு நிதி ஈட்டங்களை அதிகரித்து கொள்ள முடியும்..
0 comments:
Post a Comment