title

.

முகப்பு

Friday, January 3, 2014

யாசகத்தின் நுட்பம்....

'அம்மா ஹதிய்யா தாங்கம்மா'  'அம்மா ஹதிய்யா தாங்கம்மா'  என்று கூறிய வண்ணம் ரமழான் காலங்களில் கிழிந்த ஆடையும் குளிக்காத தோற்றத்துடன் வாடிய முகத்துடன் கையில் பச்சிளம் குழந்தைகளை ஏந்திய வண்ணம் ஆண்கள் பெண்கள் யாசகம் என்ற பெயரில் வீடுகள், கடைகள், பள்ளிவாயில்கள், சந்தைகள், பாதையோரங்களிலும் மக்கள் கூடும் இடங்களிலும் படையெடுப்பதை காணமுடிகின்றது.

           தலைநகர் பகுதிகளே இவர்களுக்கு பிராதான கேந்திர நிலையமாக காணப்படுகிறன. இவர்களில் ஆண்களாக இருந்தால் தலையில் தொப்பியும் அழுக்கான சாரமும், குளிக்காத தோற்றத்துடன் வாடிய முகமாக காட்சியளிப்பார்கள்.
பெண்களாக இருந்தால் கிளிசல் புடைவையுடன் கூடிய முக்காடும் தலைவிரி கோலமும் கையில் ஒரு குழந்தையுமாக காட்சி அளிப்பார்கள். இவர்களில் அதிகமானவர்கள்
முஸ்லிம்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அல்லாஹ்வின் ரஹ்மத் நிறைந்த புனித ரமழான் மாதத்தை கொச்சைப்படுத்தும் அளவுக்கு கையேந்தும் பழக்கம் உடையவர்களாக இம் மக்கள் நடந்து கொள்வது என்பது முஸ்லிம் மக்கள் அனைவரும் எண்ணி கவலைப்படும் விடயமாகும்.

இக் கையேந்தும் கூட்டம் தங்களை நோன்பாளிகள் என்று காட்டிக் கொள்வார்கள் ஆனால் இவர்கள் உண்மையில் நோன்பாளிகள் இல்லை வெறும் ஜாடை காட்டிக் கொள்கிறார்கள். பிச்சை எடுப்பதற்காக ரமழான் மாதத்த்pல் படையெடுக்கும் இந்தக் கூட்டம் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு குழுக்களாகவும், குடும்பங்களாகவும் வந்துவிடுவார்கள். வடக்கில் இருப்பவர்கள் தெற்கிற்கும், தெற்கில் இருப்பவர்கள் வடக்கிற்கும் என ஒரு திசையில் இருப்பவர்கள் இன்னொரு திசைக்கு சென்று கையேந்துவார்கள். தமது சொந்த இடத்தில் கையேந்துவதனால் தெரிந்தவர்களுக்கு முன் பிச்சை எடுத்தால் தெரிந்தவர்களுக்கு முன் பிச்சை எடுப்பது அவமானமாக இருப்பதும், தொழில் அவர்களுக்கு புரிந்துவிடும் என்பதற்காக  அவர்கள் கையாளும் ஒரு உத்திமுறையாகும்.

                                          தலைநகர் பகுதிகளில் ரமழான் மாதங்களில் இவ்வாறு பிச்சை கேட்கும் சமூகத்தை காணமுடிகின்றது. இவர்கள் வீதியோரங்களில் பச்சிலம் குழந்தைகளுடனும், பருவமடைந்த பெண்பிள்ளைகளுடனும் தெருத்தெருவாய் ரமழான் மாதத்தை பயண்படுத்தி கையேந்துகிறார்கள். ரமழான் மாதத்தில் அதிக அதிகமாக தர்மம் செய்வது ரமழானில் செய்யக்கூடிய அமல்களுள் ஒன்றாகும். ஆகவே கையேந்தும் இச் சமூகம் இதை தமக்கு சாதகமாக பயண்படுத்தி இப்பணியில் ஈடுபடுகிறார்கள். சிறுவர்களையும் பருவமடைந்த பெண்பிள்ளைகளையும் எந்தவித மானம் மரியாதையின்றி பிச்சை எடுப்பதற்காக பயண்படுத்துகின்றார்கள். எவ்வாறு பிச்சை எடுக்க வேண்டும், எவ்வாறு கூவ வேண்டும், கையை எவ்வாறு ஏந்த வேண்டு;ம் என்பதையெல்லூம் கற்றுக் கொடுக்கின்றார்கள். ரமழான் காலம் முடியும் வரை வீதியோரங்களே இவர்களுக்கு நிரந்தர வீடுகளாகின்றன. கஷ்டத்துக்காக சிலர் பிச்சை எடுத்தாளும் அதிகமானவர்கள் தங்கள் தொழிளுக்காகத்தான் இதை செய்கிறார்கள் என்பது தெளிவாக விளங்குகின்றது.

 எந்த ஒரு மனிதனாக இருந்தாளும் அவன் தனது சுய கௌரவத்தை இழந்துவிடக்கூடாது என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடாகும். கையேந்தும் இவர்கள் தமது மானம் மரியாதைகளை பற்றி சற்றும் கவலைப்படாமல் கையேந்நுகிறார்கள் இஸ்லாம் இதை வன்மையாக கண்டிக்கின்றது. தர்மம் செய்லதை இஸ்லாம் தாராளமாக அனுமதித்து இருக்கிறது. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் தர்மம் செய்யமல் நீ முடிந்து வைத்துக் கொள்ளாதே அவ்வாறு செய்தால் இறைவனது கொடை உனக்கு வழங்கப்படாமல் முடிந்து வைத்துக் கொள்ளப்படும்.

0 comments: