'மீற்றர் ஓட்டோல போறது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. சந்தோசமாகவும் இருக்கு ஆரம்பத்தில நான் கொழும்பு வரும்போது சில ஆட்டோ சாரதிகளின்ட ஏமாற்றுக்களுக்கு சிக்கின அனுபவங்களும் உண்டு.காரணம் எனக்கு சிங்களம் தெரியாது.'
'ஆனால் இப்போ மீற்றர் ஓட்டோ இருக்கிறதால எனக்கும் இலாபம். சாரதிக்கும் இலாபம். மீற்றர் கணக்கு பார்த்து வாடகைப் பணத்தை கேட்குது. சாரதி வாய்மூடி நிக்கிறார். சந்தோசமாக போகவேண்டிய இடத்திற்கு போய்ச்சேரலாம்'

மீட்டர் ஆட்டோ அறிமுகமாக முன்னர் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்த அவர், இப்போது அவ்வாறான சிக்கல்கள் இல்லாமல் நின்மதியாக பயணம் செய்யக்கூடியதாக இருப்பதாக கூறுகிறார்.
கொழும்பிலும் பிற பகுதியிலும் சிங்களம் தெரியாத பயணிகளுக்கு மீற்றர் ஓட்டோ ஒரு வரப்பிரசாதம். ஏமாற்றுப் பேர்வழிகளிடம் இருந்தும் தப்பிக்கொள்ளலாம் இவ்வாறு கலைஞன் சீலன் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
இலங்கையில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மீற்றர் ஆட்டோக்களின் பாவனை நல்ல பயனைக் கொடுத்துள்ளதாகவே பெரும்பாலான பயணிகள் கருத்து வெளியிடுகின்றனர்.
கொழும்பு – தெகிவளை பகுதியைச் சேர்ந்தவர் முகமட் ரியாஸ். கொழும்பில் வியாபார நிலையம் ஒன்றை நடத்தி வருபவர். மீட்டர் ஆட்டோ குறித்து அவர் கூறும்போது,
மீட்டர் ஆட்டோ வந்தபின் அதைத்தான் பாவிக்கிறன். மீற்றர் இல்லாத ஓட்டோல ஏற மாட்டேன். நான் டிரைவர நம்பல. மீற்றரை நம்புறன் என்கிறார்.
ஓட்டோக்களில் மீற்றர் பொருத்தப்பட்டிருப்பதும் அதன் திட்டம் அமுல்ப்படுத்தப்படடிருப்பதும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதுதொடர்பாக ஆட்டோ சாரதிகள் சிலரிடம் கேட்டபோது, மீற்றர் கருவி டிஐpற்ரல் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அமைக்ப்பட்டுள்ளது. அதில் எமக்கு கை வைக்க முடியாது. ஏமாற்று சாத்தியமே இல்லை என்கின்றனர்.
ஏமாற்றக்கூடியளவு டிஐpற்ரல் கருவிகள் தரம் குறைந்ததுமல்ல. 'லிங் லங்கா' நிறுவனத்தினால் மீற்றர் சீரான முறையில் செப்பனிடப்பட்டு பொறுத்தப்பட்டுள்ளது. சாரதிகள் தமக்கேற்றவாறு மாற்றியமைப்பதாக கூறுவது உண்மைக்கு புறம்பானது. அங்கீகரிக்கபப்பட்ட நிறுவனங்களின் தயாரிப்புக்கள் தரம் குறைவானது அல்ல என்கின்றனர்.
களுபோவில பகுதியைச் சேர்ந்த மீற்றர் ஓட்டோ சாரதி ஜகத் கூறும்போது,
மீற்றர் பொருத்தப்பட்டமையால் எமக்கும் இலாபம். பயணிகளுக்கும் இலாபம். யாரும் யாரையும் ஏமாற்ற மடியாது என்றார்.

மேலும் இதில் உள்ள இன்னொரு அனுகூலம் காத்திருப்பு கட்டணம். புயணிகளை ஏற்றிச் சென்று காத்திருக்கும்போது அதற்கான கட்டணத்தையும் மீற்றரே கணக்கிடும். இதனால் எமக்கும் பயணிகளுக்குமிடையில் இது தொடர்பாக ஏற்படும் முரண்பாடுகளும் தவ்ர்க்கப்படும் என்கிறார்.
ஓட்டுமொத்தத்தில் மீற்றர ஓட்டோ திட்டம் குறித்து பயணிகள் மற்றும் சாரதிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் சாதகமான கருத்துக்களெ வெளிப்படுகின்றன. யாரும் யாரையும் ஏமாற்ற முடியாது.
0 comments:
Post a Comment