சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீபத்திரகாளி அம்மன் கோவில் மிருகவேள்வியைத் தடுக்கக்கோரும் ஆணைகோர் மனு மீதான வாதப்பிரதிவாதங்களை ஜூலை 27ஆம் திகதி எடுத்துக்கொள்வதற்கு மேன்முறையீட்டு நீ
திமன்றம் தீர்மானித்துள்ளது.
இந்த மனு நேற்று புதன்கிழமை நீதியரசர்கள் எஸ்.ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் தீபாலி விஜேசுந்தர முன்னிலையில் எடுக்கப்பட்டது.
ஸ்ரீபோதிராஜ மன்றம்இ ஜாதிக சங்க சம்மேளனம்இ தர்மவிஜய மன்றத் தலைவர் ஒல்கொட் குணசேகரஇ வண. பண்டிரிப்புவே வினீதா தேரோஇ மிருக நலன்புரி நம்பிக்கை நிருவனத் தலைவி இராங்கனி டீ சில்வாஇ அதன் தர்மகர்த்தா விசாக திலகரத்னஇ இலங்கை மிருக பாதுகாப்பு சங்க உதவித் தலைவர் லொறைன் மார்கரைட் பார்தோலொமஸ்இ அதன் செயலாளர் ஷர்மினி தெசிறீ ரட்நாயக்க மற்றும் ஆறு பேர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.
பொலிஸ் மாஅதிபர்இ புத்தளம் பிரதிப் பொலிஸ் மாஅதிபர்இ சிலாபம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிஇ சிலாபம் நகரசபைஇ அதன் தலைவர்இ ஸ்ரீபத்திரகாளி அம்மன் கோவில் தர்மகர்த்தாக்களான எம். கனகரத்தினம்இ காளிமுத்து சிவபாக்கியசுந்தரம் மற்றும் மஹேந்திர சாமி ஆகியோருடன் அகில இலங்கை இந்து மாமன்றம் மற்றும் சட்டமாஅதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.