title

.

முகப்பு

Saturday, December 8, 2012

தெல்லிப்பளை துர்காபுரம் சிறுவர் இல்லம்




தெல்லிப்பளை துர்காபுர மகளிர் இல்லமானது 1982ம் ஆண்டு மாசி மாதம் 3ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. 9 சிறுமிகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இல்லம் தற்போது 350 பிள்ளைகளை கொண்டதாக காணப்படுகிறது.


 இச் சிறுவர் இல்லத்தில் தாய் தந்தையற்ற சிறுவர்களை வளர்ப்பதே இச் சிறுவர்இல்ல யாப்பின் ஒழுங்காக காணப்பட்டது. கால சூழ்நிலையால் ஏற்பட்ட பலாலி யுத்தம் வன்னி யுத்தம் காரணமாக தாய் தந்தையற்ற குழந்தைககளும் நோய் வாய்ப்ட்ட, உடல் நலிவுற்ற, நரம்பு தளர்ச்சியுற்ற பெற்றேரின் குழந்தைகளையும் இவ் இல்லத்தில் சேர்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இச் சிறுவர் இல்லத்pன் தற்போதைய நிலைபற்றி, இல்லத்தின் வளர்ச்சி பற்றி சிறுவர் இல்ல நிர்வாகி குறிப்பிடுகையில்
            தெல்லிப்பளை துர்காபுரம் சிறுவர் இல்லத்தில் ஆண்டு 1 தொடக்கம் உயர்தரம் வரையிலான கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன, இச்சிறுவர் இல்லத்தில் இது வரை 12 மேற்பட்ட மாணவர்கள் பழ்களைகளக அனுமதி பெற்றுள்ளனர். அது மட்டுமல்லாமல் கட்டுரைப் போட்டி, பண்ணிசைப் போட்டி, விவாதப் போட்டி போன்றவற்றில் பங்கு பற்றி 28 தங்கப் பதக்கங்கள் பெற்றுள்ளனர். மேளும் இவர்களுக்கு கிடைக்கும் பணப்பரிசுகள் அவரவர் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்படும்.
மேளும் அவர் கூறுகையில்....
                     எல்லாத் துறையிளும் வள்ளவர்களாக திகழும் இவர்கள் சிறந்த குடும்பப் பெண்ணாக எதிர்காலத்தில் திகழ வேண்டியிருப்பதால் சமையல், தையல், சிறந்த பழக்க வழக்கங்கள் என்பன கற்றுக் கொடுக்கப்படுகின்றன. குறிப்பாக 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இல்லப் பணியாளர்களுடன் இணைந்து சமயல் நடiடிக்கைகளை மேற்கொள்கின்றனர். இவ் இல்ல மாணவர்கள் தங்களுடைய பிறந்த நாளை அகில இலங்கை இந்து மாமந்த காரிய தேசியின் ஊக்குவிப்புடன் கொண்டாடி வருகின்றனர். 1 மாதத்தில் எத்தனை பிள்ளைகளுக்கு பிறந்த நாள் உள்ளதோ அணைவருக்கும் அந்த மாத்திலே பிறந்த நாள் கொண்டாடப்படும். தாய் தந்தையற்ற பிள்ளைகளுக்கு நிர்வாகத்தினால் நகை, பணம் உதவி வழங்கப்பட்டு திருமணம் செய்யது வைக்கப்படும்
                உலகளாவிய ரீதியில் இவ் இல்லம் அறிமுகமாகி இருப்பதால் வெளிநாட்டு உதவிகளும் வழங்கப்படுகின்றன, தற்போது இவர்களுக்காக ஒரு கட்டிடம் கட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.