சாவக்கச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற வரும் மற்றும் சிகிச்சை பெற்றுச்செல்லும் நோயாளிகளின் போக்குவரத்து நலன் கருதி சாவகச்சேரி நகர சபையால் வைத்தியசாலையில் போக்குவரத்து சேவை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. வைத்திய சாலைக்கு சிகிச்சை பெறவரும் போக்குவரத்து வசதிகளற்ற வறுமையான நோயாளர்களின் நன்மை கருதியும், வைத்தியசாலையில் இருந்து சிகிச்சை பெற்று வெளியேறும் வசதி வாய்ப்பற்ற நோயாளர்களின் நன்மை கருதியும் முச்சக்கர வண்டியின் மூலம் இச்சேவை இடம்பெற உள்ளதாகவும் இதற்கென புதிதாக முச்சக்கர வண்டி ஒன்றும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் சாவககச்சேரி நகர சபை உறுப்பினர் ஞா. கிஷோர் தெரிவித்தார்.
கி.மீ அடிப்படையில் மிகவும் குறைந்த கட்டணத்தில் காலை 8 மணி தொடக்கம் இரவு 8 மணி வரையும் கி.மீ க்கு ரூபா 40 என்ற குறைந்த கட்டணத்தில் இச் சேவை தினமும் இடம் பெறும் என்றும் இதன் மூலம் எமது பிரதேச மக்களும் நோயாளர்களும் மிகவும் நன்மை பெறுவர் என்று நகரசபை உறுப்பினர் தெரிவித்தார்.