இலங்கையின் சரித்திரப் பின்னணியோடு இணைந்து மங்காப்புகழ் பெற்று விளங்கும் சிலாபம் முன்னேஸ்வரம் தேவஸ்தானத்தில் ஆடிமாத உற்சவம் இன்று 28ம் திகதி கொடியேற்ற வைபவத்துடன் ஆரம்பமாகிறது.
இந்நாட்டுக்கு விஜயன்
வருகை தருவதற்கு முன்பே ஐந்து பெரும் சிவஸ்தலங்கள் இருந்ததாக வரலாற்று நெறியாளரான சேர் போல் பீரிஸ் தெரிவித்துள்ளார். மகா தீர்த்தத்தில் திருக்கேதீஸ்வரமும்இ சாலவத்தை (சிலாபம்) யில் முன்னேஸ்வரமும்இ கோட்டையாற்றில் திருக்கோணேஸ்வரமும்இ கீரிமலையில் நகுலேஸ்வரமும்இ இருந்ததாக தெரிவிக்கும் வரலாற்று நெறியாளர் ஐந்தாவது சிவஸ்தலம் பற்றி தெரிவிக்காது உள்ளார்.
கி.மு. 543ம் ஆண்டு இந்நாட்டுக்கு வருகைத் தந்த விஜயன் இந்நாட்டை முப்பத்தெட்டு வருடங்கள் ஆட்சி புரிந்துள்ளான். இவனது ராஜதானியின் நான்கு வாசல்களிலும் சிறப்புடன் விளங்கிய நான்கு சிவாலயங்களை புனருத்தாரணம் செய்தான் என பழைய இலங்கைச் சரித்திர நூல் (அமெரிக்கன் மிஷன் பதிப்பு) தெரிவிக்கிறது. முன்னேஸ்வரம் ஆலயம் பல்வேறு சிறப்புக்களை கொண்டது.
இதன் தோற்றம் பற்றிய முழுமையான ஆதாரபூர்வமான வரலாற்று நூல் இதுவரை வெளிவரவில்லை. இந்நாட்டின் பழைய சரித்திர சான்றுகளையும்இ பல்வேறு மொழி நூல்களையும் ஆதாரங்களாக தெரிவித்தே வரலாற்றைத் தெரிந்துக் கொள்ள இயலுகின்றது.
4500 ஆண்டுகளுக்கு முன்னர் கடைச் சங்க காலத்தில் தமிழர்கள் முதன்முதலாக இலங்கையில குடியேறி வாழ்ந்து வந்துள்ளனர்.
அக்காலத்தில் பாண்டிய அரசனின் கீழ் இலங்கையில் அரசும் இயங்கியுள்ளது. அக்காலத்தில் பாண்டிய மன்னனின் ஆட்சி மிகவும் சிறப்புற்று இருந்தது. பாண்டியனின் ஆட்சி கொடியின் சின்னம் மீன் ஆகும். இவ் ஆலயத்தின் கருவறைக்கும் முன்னே உள்ள மகா மண்டபம் கருங் கல்லினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இப்பகுதி பாண்டிய மன்னன் காலத்து கோவில் கட்டுமான கட்டட அம்சத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.
மகா மண்டபத்தின் மேல் பகுதியும் தனி கருங்கல்லேயாகும். இக் கல்லில் சதுரமாக செதுக்கப்பட்ட பகுதியில் நான்கு மீன்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதனை கொண்டும்இ மகா மண்டபத்தில் உள்ள கல்தூண்களின் ஓவியங்களைக் கொண்டும் பாண்டிய மன்னனின் ஆட்சிக் காலத்தில் இவ் ஆலயம் அமைக்கப்பட்டு இருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது.
தட்சணக் கைலாச புராணத்திலும்இ சிவபுராணத்து சனத்குமாரசம்ஹிதையில் அலகேஸ்வரமெனவும்இ அறுபத்து நான்கு சக்தி பீடங்களுள் ஒன்றெனவும்இ தெரிவிக்கப்படுவது முன்னேஸ்வர ஆலயமேயாகும். வியாச முனிவரால் அர்ச்சிக்கப்பட்டதும்இ இவ் ஆலயத்தின் பொறுப்பில் நாணயம் (குறட்டுக் காசு) வெளியிடப்பட்ட பெருமைக்குரிய ஆலயமாகும். தொன்று தொட்டு குபேர நாடான இலங்கையில் ஸ்ரீ வடிவாம்பிகை சமேத முன்னைநாத சுவாமிகள் எழுத்தருளியிருக்கும் முன்னேஸ்வர ஆலயத்துக்கே உரியதாகும்.
நீண்டதோர் இதிகாச புராண வரலாற்றுடன் இணையப்பட்டுள்ள இவ் ஆலயத்தின் பெருமைகளை சிங்கள இலக்கிய நூலான கோகில சந்தேஷ்ய வெகுவாக தெரிவித்துள்ளது. இலங்கையின் தென்பகுதியான தெவிநுவரையிலிருந்து வட கரைபகுதியான யாழ்ப்பாணம் வரையிலான ஆலயங்களைப் பற்றி இந்நூல் தெரிவிக்கையில் முன்னேஸ்லரம் பற்றி வெகு பெருமையாக விளக்கியுள்ளது.
இராமாயணத்தின் நாயகனான இராமபிரான் சீதாபிராட்டியைத் தேடி இலங்கை வந்து இராவணனுடன் சம்ஹாரம் செய்தப் போது இராமபிரானை பிரமஹத்தி தோஷம் தொத்திக் கொண்டது. அவன் மீண்டும் புஷ்பவிமானத்தில் பாரத நாட்டிற்கு திரும்புகையில் முன்னேஸ்வரத்தை கடக்கும் போது தோஷம் நீங்கியது. உடனே இராமபிரான் முன்னேஸ்வரம் ஆலயம் சென்று சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து பூசைகள் நடத்தி சித்திகளைப் பெற்றார் என தட்சிணகைலாச மகாத்மியம் தெரிவிக்கிறது.
பாரதக் கதையோடு முன்னேஸ்வர ஆலயத்திற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாவிட்டாலும் வியாசர் முனிவர் முன்னேஸ்வரத்தில் வழிபட்டதாக தட்சிணகைலாசம் தெரிவிக்கின்றது.
0 comments:
Post a Comment