1896 சிலாபம் கலவரம் இலங்கையின் வடமேல் மாகாணம்இ சிலாபம் நகரில் வாழ்ந்த முஸ்லிம் வியாபாரிகளுக்கும்இ கத்தோலிக்க மீனவர்களுக்குமிடையில் 1896 ஆம் ஆண்டில் இடம்பெற்ற கலவரம் ஆகும்.
அப்போது வடமேல் மாகாணத்தில் நிலவிய அரிசித்தட்டுப்பாடு சிலாபம் நகரை அதிகளவில் பாதித்திருந்தது. இதனால் ஏற்பட்ட அரிசி விலை ஏற்றத்திலிருந்து கத்தோலிக்கருக்கும்இ முஸ்லிம் வியாபாரிகளுக்குமிடையில் ஏற்பட்ட சச்சரவு கல
வரம் வரை வளர்ந்தது
.டிசம்பர் 26 1896ல் சிலாபம் நகரவீதிகளில் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவ சிங்களவர்களுக்குமிடையில் கைகலப்புக்கள் நடந்தன. சிலாபம் நகரில் இருந்த முஸ்லிம்களுக்குச் சொந்தமான கடைகள் சேதப்படுத்தப்பட்டன. ஒருவரின் தலை உடைக்கப்பட்டதுடன்இ சிலர் காயமடைந்தனர். முஸ்லிம்களை பன்றிகளாகச் சித்தரிக்கும் படங்கள் மதில்களில் ஒட்டப்பட்டன.
கலவரத்தை அடக்குவதற்காக கொழும்புஇ மாறவில போன்ற இடங்களிலிருந்து காவல்படையினர் வரவழைக்கப்பட்டனர். கடைகள் பூட்டப்பட்டன. வர்த்தக நடவடிக்கைகள் ஸ்தம்பிதத்தால் நகரமக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர். காவல்படையினரின் பாதுகாப்புடன் கடைகளைத் திறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கலவரம் தொடரும் என்ற அச்சம் இருந்ததால் சுமார் 6 மாதகாலம் நகரை காவல்படையினரின் காவல் செய்தனர்
0 comments:
Post a Comment