title

.

முகப்பு

Sunday, August 12, 2012

யாழ் நகரில் அதிகரிகத்து வரும் லொத்தர் நிலையங்களும், அதன் விற்பனையின் போக்கும்...




யாழ்ப்பாணத்தில் அதிகளவான லொத்தர் விற்பனை நிலையங்கள் காணப்படுகின்றன. இவ்வாறான லொத்தர் நிலையங்கள் நகர்ப்புறங்களிலேயே அதிகளவு பரவி உள்ளன.
யாழ் நகர அதிஷ்ட இலாப சீட்டு விற்பனையின் போக்கு பற்றி விற்பனை முகவர் குறிப்பிடும் போது யாழ் நகரில் 23 அதிர்ஷ்ட இலாப சீட்டு விற்பனை நிலையங்கள் இருப்பதாகவும், ஏனைய மாவட்டங்களைற விட யாழ் மாவட்டத்தில் குறைவான (25வீதம்)  விற்பனையாவதாகவும் தெரிவித்தார். மேலும் அதிஷ்ட இலாபசீட்டானது அதிகளவில் விற்பனையாவதற்கு காரணம்,வறுமையும் மக்களுக்கு அதன் பால் உள்ள விருப்பமுமே என அவர் தெரிவித்தார்.
ஆரம்பத்தில் அதிஷ்ட இலாப சீட்டு விற்பனை யாழ் நகரில் குறைவாக இருந்த போதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் பணப்பரிசுகள் கூடுதலாக கிடைத்தமையினால் மக்கள் அதிஷ்ட இலாப சீட்டுகளை வாங்குவதில் அதிக  ஆர்வம் காட்டுகின்றனர்.
குறிப்பாக அதிஷ்ட இலாப சீட்டு விற்பனையில் (60வீதம்) யாழ் மக்களும் (40வீதம்)  வெளி மாவட்டங்களில் இருந்து வரும் மக்களும் இராணுவத்தினரும் வாங்குவதாக விற்பனை முகவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இது பற்றி அவர் குறிப்பிடும் போது வட்டுக்கோட்டையில் 3 கோடி 82 இலட்சம் ரூபாவும், சங்கானையில் 28 இலட்சம் ரூபாவும் கோண்டாவிலில் 10 இலட்சம் ரூபாவும் பரிசாக கிடைத்தமை அதிஷ்ட இலாப சீட்டில் மக்கள் மேலும் அதிகமாக வாங்குவதற்கு ஏதுவாக அமைவதாக அவர் குறிப்பிட்டார்.
அபிவிருத்தி லொத்தர் சபையின் மூலம் கிடைக்கும் இலாபப்பங்கானது ஜனாதிபதி நிதியத்தினூடாக கல்வித்துறைக்கும் ( மஹபொல) உயர்கல்விக்கும் உதவிவழங்குகின்றது. மேலும் இச்சுகாதார துறையினூடாக புற்றுநோய், சிறுநீரகநோயர்களுக்கும் உதவி வழங்கின்றது. அத்துடன் ஊனமுற்ற இராணுவத்தினருக்கும் உதவி வழங்கிவருகிறது. தற்போது யாழ் நகரில் அதிர்ஷ்ட இலாப சீட்டின் விற்பனைப்போக்கானது அதிகரித்துள்ளதோடு மக்களும் அதை வாங்குவதில் அதிக ஆர்வத்தை காட்டுகின்றனர்.

0 comments: