நெல்லை விதைத்து புல்லை அறுவடை செய்யும் நிலைக்கு இம்முறை வட மாகாண விவசாயிகளை ஏமாற்றியுள்ளது இயற்கை.யாழ்ப்பாணம் உட்பட வட மாகாணம் முழுவதும் மழையை நம்பி காலபோக நெற்செய்கையில் ஈடுபட்ட விவசாயிகள் இம்முறை வெறுங்கையுடன் நொந்துபோயுள்ளனர். இயற்;கையை நம்பியிருந்த எம்மை அந்த இயற்கை ஏமாற்றிவிட்டது. இறுதியில் எமக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது என்கிறார். நாவாந்துறையைச் சேர்ந்த விவசாயி தம்பிராசா சண்முகலிங்கம். இவர் நாவந்துறை, ஆனைக்கோட்டை விவசாய சம்மேளன தலைவராகவும் உள்ளார்.
நீண்ட காலமாக நெற்பயிர்செய்கை இவரது பிரதான தொழில். முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த வருடம் மழையில்லாமல் நெற்பயிர்கள் எல்லாம் நாசமாய் போய்விட்டன. வயல் நிலத்தைப்பார்க்கும் போதெல்லாம் வயிறு பற்றி எரிகின்றது. கடந்த வருட உழைப்பு எல்லாம் வீணாகிவிட்டது என்று தன் சோகத்தை எம்மிடம் பகிர்ந்து கொண்டார் சண்முகலிங்கம். இது அவரது குரல் மட்டுமல்ல யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த 90 வீதமான விவசாயிகளின் குரல்.
எங்கட ஆணைக்கோட்டை - உயரப்புலம் விவசாய சம்மேளனத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 90 வீதமான விவசாய நிலங்கள் இந்த வருசம் மழையில்லாமல் எல்லாம் அழிஞ்சு போச்சுது. எங்கட இடத்தில குளங்கள் எதுவும் இல்ல. முற்றுமுழுதா மழையை நம்பி தான் நாங்கள் நெல் போடுறனாங்கள். போன வருசமும் 28 பரப்பில நெல் போட்டனான். அந்த 28 பரப்பில ஒரு பரப்பு நெல் கூட விளையல. வயல் பக்கம் போற நேரமெல்லாம் கடன் பட்டு வாங்கி செய்தது எல்லாம் இப்படியா போச்சுது எண்டு மனம் வேதனைப்படும் என்று தன் இயலாமையை எங்களிடம் கொட்டித்தீர்த்தார் சண்முகலிங்கம்.
என்கிறார் சுப்ரமணியம் கந்தையா. இவரும் நாவந்துறை பகுதியில் நெல்விதைத்து இருந்ததையும் இழந்து நிற்பவர்.
சில இடங்களில்ல மழையில்லை எண்டாலும் குளத்தை நம்பியாச்சும் பயிர்ச்செய்கை மேற்கொள்ளுவாங்கள். ஆனால் எங்கட இடத்தில
ஒரு குளம் கூட இல்லை. இது தான் பிரச்சினை. பக்கத்தில கடல் இருக்கிறதால குளம் வெட்டேலாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தம்பிராசா சண்முகலிங்கம் |
இந்த நிபந்தனையை நாங்கள் ஏற்றுக்கொள்ளல. பயிர்கள் எல்லாம் அழிஞ்சு போச்சு இனி ஒரு பிரியோசனமும் இல்லை. ஆடு, மாடுகளாச்சும் திணணட்டும் என்று விட்டுட்டம். இதால இப்போ காப்புறுதியும் எங்களுக்கு கிடைக்குமா எண்டு ஐம்மிச்சம் தான் என்கிறார் ஏக்கத்துடன்.
0 comments:
Post a Comment