'பில்லி சூனியத்தால் ஒருவரை அழிக்க முடியும் என்பது பொய்' என்றும் தனக்கு பில்லி சூனியம் வைத்து அதை உண்மையென நிரூபிப்பவர்களுக்கு 50 லட்சம் பரிசு தரப்போவதாகவும் சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் ஜெய்னுலாபிதீன். அவருடைய அழைப்பை ஏற்று '48 நாட்களில் ஜெய்னுலாபிதீன் பில்லி சூனியம் உண்மை என்பதை ஒப்புக்கொண்டு அறிக்கை விடுவார்இ அல்லது தற்கொலை செய்துகொள்வார்' என்ற அறிவித்துவிட்டு ஜெய்னுலாபிதீனுக்கு பில்லி சூனியம் வைத்தார் திருச்சியைச் சேர்ந்த 'அகோரி' மணிகண்டன். 48 நாட்களுக்குள் இந்த விஷயங்கள் நடக்கும் என்றும்இ ஒருவேளை நடக்காவிட்டால் பில்லி சூனியம் இவையெல்லாம் பொய் என்பதை ஒப்புக்கொண்டு 'அகோரி' மணிகண்டன் இஸ்லாம் மதத்தைத் தழுவுவதுடன் பில்லி சூனியத்திற்கு எதிராக பகிரங்கமாகப் பிரசாரம் செய்வார் என்று இருதரப்பும் ஒப்பந்தம் போட்டிருந்தார்கள். இந்த ஒப்பந்தத்தின் இறுதிநாள் செப்டம்பர் 17 அன்று முடிந்தது. என்ன ஆனார் ஜெய்னுலாபிதீன்? என்ன ஆச்சு சவால்?
தவ்ஹீத் ஜமாத் அலுவலகம் சென்றால்இ பில்லி சூனியத்தினால் எந்தப் பாதிப்பும் அடையாமல் ஆரோக்கியமாகஇ அதே சமயம் உற்சாகமாக இயங்கிக் கொண்டிருக்கிறார் ஜெய்னுலாபிதீன்.

''போட்டியை அறிவிச்ச அன்னைக்கே 'எனக்கு பில்லி சூனியம் வெச்சு ஒரே நாள்ல என்னை ஏதாவது பண்ணுங்க'ன்னுதான் அவர்கிட்ட சொன்னேன். பில்லி சூனியமெல்லாம் பொய்னு அவருக்கே தெரியும். அதனால தான் 48 நாட்கள் அவகாசம் கேட்டார். இன்னும் பல வருடம் அவர் பூஜை பண்ணிக்கிட்டு இருந்தாலும் நான் எப்படி இருக்கேனோஇ அப்படித்தான் இருக்கப்போறேன். ஒப்பந்தத்தின்படி அகோரி மணிகண்டன் இஸ்லாம் மதத்தைத் தழுவி பில்லி சூனியத்திற்கு எதிராகப் பிரசாரம் பண்ணணும். ஆனால்இ அதை அவர் பண்ண மாட்டார். நேத்தே அவருக்கு போன் பண்ணிஇ 'நீங்க சொன்ன மாதிரி எதுவும் நடக்கலை. மீடியாவுக்கு நியூஸ் சொல்லிடுவோமா'னு கேட்டதுக்குஇ 'இல்லை. நீங்க என்னுடைய பூஜைக்கு நிறையத் தடைகள் பண்ணியிருக்கிறதனாலதான் பில்லி சூனியம் வேலை செய்யலை. இன்னும் கொஞ்சம் கால அவகாசம் வேணும்'னு கேட்கிறார். எங்களுக்குத் தேவை இதைப் பொய்னு நிரூபிக்கிறது மட்டும்தான். அதை செஞ்சாச்சு... இனி அவர் இஸ்லாம் மதத்துக்கு மாறுவதும் பில்லி சூனியத்திற்கு எதிராகப் பிரசாரம் பண்றதும் அவரோட விருப்பம்'' என்றார்.
அகோரி மணிகண்டன் என்ன சொல்கிறார்? ''கண்டிப்பா செப்டம்பர் 17 அன்னைக்கு அவர் தற்கொலைக்கு முயற்சி பண்ணியிருப்பார். அவரை யாரோ காப்பாத்தியிருக்கிறதுனாலதான்இ இப்போ அவர் உயிரோட இருக்கார். தவிரஇ அவருக்கு பில்லி சூனியம் வெச்ச இந்த 48 நாள்ல சிலபேர் எனக்குத் தொந்தரவு கொடுத்துக்கிட்டிருந்தாங்க. என்னுடைய குடிசையைக் கொளுத்தினாங்கஇ வண்டியைத் தீ வெச்சு எரிச்சாங்கஇ நான் தியானம் பண்ணிக்கிட்டு இருக்கும்போது கல்லைவிட்டு எரிஞ்சாங்க. இப்படியெல்லாம் செஞ்சா நான் எப்படி கான்சென்ட்ரேஷனோட பூஜை பண்ண முடியும்? ஒருவேளை அவர் தற்கொலைக்கு முயற்சி பண்ணாம நல்லபடியாவே இருந்திருந்தாலும் என்னுடைய பில்லி சூனியத்தை சரியான முறையில் செய்யவிடாம தடுத்ததுதான் அவருடைய ஆரோக்கியத்துக்குக் காரணமா இருந்திருக்கும். இப்பவும் ஒண்ணும் கெட்டுப்போயிடலை. இன்னும் 48 நாள் டைம் கொடுங்க. அவருக்கு பில்லி சூனியம் வைக்கிறேன்'' என கொந்தளிக்கிறார் அகோரி மணிகண்டன்.
0 comments:
Post a Comment