தேர்தல் பிரச்சாரங்கள் இன்று நள்ளிரவுடன் முடிவு! வன்முறைகள் அதிகரிக்கும் அபாயம்
கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மூன்று மாகாண சபைகளுக்குமான இறுதிக்கட்ட சூறாவளி தேர்தல் பிரசார நடவடிக்கைகள் இன்று புதன்கிழமை நள்ளிரவுடன் நிறைவு பெறுகின்றது.
பிரசார நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் மாகாண சபைத்தேர்தல்
சட்டதிட்டங்களை மீறுகின்றவர்களுக்கு ௭திராகக் கடுமையான நடவடிக்கைகளை
௭டுக்குமாறு திணைக்களம் பொலிஸாருக்கு பணித்துள்ளது.
கலைக்கப்பட்ட மூன்று மாகாண சபைகளுக்குமான வேட்பு மனுத்தாக்கல் ஜூலை 12 ஆம் திகதியுடன் நிறைவடைந்ததன் பின்னர் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்களின் பிரசார நடவடிக்கைகள் சூடுபிடிக்க ஆரம்பித்தன.
இந்நிலையில் மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தலின் இறுதி சந்தர்ப்பத்தின் போது வன்முறை சம்பவங்கள் அதிகரிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் ௭ச்சரிக்கை விடுத்துள்ளன

0 comments:
Post a Comment