எதிர்வரும் செப்டெம்பர் 2ஆம் திகதி வரை முன்னேஸ்வரம் பத்திரகாளியம்மன் கோவில் வளாகத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் எதனையும் நடத்தக் கூடாது என சிலாபம் மாவட்ட நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
காவல்துறையினர் செய்த முறைப்பாட்டை பரிசீலித்த சிலாபம் மாவட்ட நீதிபதி ஜகத் கஹந்தகம நேற்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
முன்னேஸ்வரம் பத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த மிருக பலிபூஜை எதிர்வரும் 1ஆம் திகதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில்இ அதனை நிறுத்துமாறு ஜாதிக ஹெல உறுமய உள்ளிட்ட பௌத்த அமைப்புக்கள் கோரிக்கை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை நினைவூட்டத்தக்கது.
0 comments:
Post a Comment