title

.

முகப்பு

Monday, November 19, 2012

முஸ்லிம்களின் அப்பாவித்தனம்


             கடந்த காலங்களில் பல ஊடகங்களிலும் மத்திய கிழக்கையே ஆட்டி வைத்த ஒரு குறுந்திரைப்படம் பற்றியதான செய்தி வளம் வந்து கொண்டிருந்தது.

               உலகில் வாழும் 160 கோடி முஸ்லிம் மக்களினதும் உணர்வுகளை சீண்டி, கொதி நிலைக்கு கொண்டு சென்ற ஒரு நிகழ்வு முஸ்லிம்களின் இறைத் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை இழிவு படுத்தி வந்த முஸ்லிம்களின் அப்பாவித்தனம்( Innocence of Muslims) வல்லரசை ஆட்டி வைத்ததும், 

Add caption

                                       

 முஸ்லிம்களின் உணர்வுகளை தூண்டிய இத்திரைப்படத்தில் உள்ளடக்கப்பட்ட விடியம், இத்திரைப்படத்தின் பின்னனி பற்றியதான ஓர் கண்ணோட்டம். முஸ்லிம்களின் இறைதூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் என்பவற்றை ஒவ்வொரு முஸ்லிமும் பின்பற்றுவது முஸ்லிம்களின் அடிப்படை கொள்கைகளில் ஒன்றாகும். அவ்வாறு நபியவர்கள் போதித்த அழகிய போதனைகள், அவர்களது வாழ்க்கை முறை என்பவற்றிக்கு முற்றுமுளுதாக மாறுபட்ட வகையில் நபியவர்களை இழிவாக சித்தரிக்கக் கூடியதான காட்சிகள் உள்ளடக்கப்பட்டுள்ன. குறிப்பாக நபியவர்களை ஒரு காமவெறிப்படித்தவராகவும், பெண்பித்து பிடித்து அழையும் ஒருவராகவும், தீவிரவாதத்தை தூண்டும் தீவிரவாதியாகவும் முஸ்லிம் மதம் பொய்யானது, நபியவர்கள் போதித்த மார்க்கம் பொய்யானது எனவும் இப் பொய்யான மார்க்கத்தை பின்பற்றும் முஸ்லிம்கள் அப்பாவிகள் என்றும் விசக் கருத்துக்களை உள்ளடக்கியதான ஒரு கணொளியை உலக மக்கள் மத்தியில் இஸ்லாம் மதம் பற்றியதான தவறான எண்ணங்களை விதைத்துள்ளது. இத் திரைப்படத்தின் 14 நிமிட முன்காட்சி   (Trailer) காணொளி (You Tube)  நடிக நடிகைகள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட குழு ஒன்று இத் திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டுள்ளது. 

இத் திரைப்பட நடிக நடிகைகள் குழுவினர் ஒன்று  இத் திரைப்படத்துக்கும் எமக்கும் சம்பந்தமில்லை, இப் படத்தை தயாரிக்கும் போது இஸ்லாத்தை எதிர்க்கும் படமாக தயாரிக்க படவில்லை மாறாக 2000 வருடங்களுக்கு முன் வாழ்ந்த எகிப்திய நாகரீகமற்றோரின் வாழ்க்கையை எடுத்துக்காட்டுவதாகவே இப் படம் தயாரிக்கப்பட்டது. படத்தில் இ;ஸ்லாம்,முஸ்லிம்கள்,முஹம்மத் போன்ற எந்த வார்த்தையும் நாம் நடிக்கும் போது பயன்படுத்தப்படவில்லை, நம்மை அறியாமலே தயாரிப்பாளர் நாம் பேசியதை எல்லாம் மாற்றியமைத்து படத்தை வேறொரு கோணத்துக்கு திசை திருப்பியுள்ளார். இவ்வாறு நடிக நடிகைகளின் ஆதங்கம் காணப்படுகிறது.  இறை தூதரை இழிவாக சித்தரித்த இத் திரைப்பட இயக்குணர் பற்றியதான சிறிய கண்ணோட்டம் ஸாம் பஸில் என்று தன்னை அறிமுகப்படுத்திய இவன் ஒரு இஸ்ரேல் நாட்டுப் பிரஜை, கலிபோர்னியாவில் வசித்து வருகிறான்;. ன் இஸ்லாத்தை மனதார வெறுப்பதாகவும், இந்த படத்தை தயாரிப்பதற்கு 100 தனவந்தர்கள் 50 இலட்சம் அமெரிக்க டொளர்கள் தந்ததாகவும் அறிவித்தான். மேலும் இவன் கடந்த காலத்தில் இவன் பணமேசடிக்காக சிறை தண்டனையை அனுபவித்தமையும் குறிப்பிடத்தக்கது. இத் திரைப்படத்தின் ஒரு பகுதி செப்டம்பர் 9ம் திகதி அல் நாஸ் (யுட யேள) எனும் எகிப்திய தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. இதை தொடர்ந்து செப்டம்பர் 11ம் திகதி லிபியா பெங்காளியில் உள்ள அமெரிக்க தூதரகம் தாக்கப்படட்டது. தாக்குதளின் விளைவாக லிபியாவின் அமெரிக்க தூதுவர் உற்பட 4 அமெரிக்கர்கள் கொள்ளப்பட்டனர் ல.pபியாவில் வைக்கப்பட்ட தீ உலகம் முழுவதும் வன்முறைகளாக எறியப்பட்டன.

                      இத் திரைப்படம் மத்திய கிழக்கில் வெளியிடப்படுவதற்கு சில தினங்களுக்கு முன் லிபியாவின் அமெரிக்க தூதரகம் மீதான தாக்குதல் திட்டமிடப்பட்டுவிட்டது என்பதை ருளுயு பாராளுமன்ற உறுப்பினர்களுள் ஒருவரான (லூயி கோமெர்ட்) டீசநவைடியசவ  செய்திக்கு வழங்கிய பேட்டியில் 'Embassy attacks appear coordinated; not linked to the film' பகிரங்கமாக கூறுகிறார். இத் திரைப்படம் வெளியிட்டது தொடர்பாக அமெரிக்கா கருத்து தெரிவிக்கையில் இத் திரைப்படத்துக்கும் எமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என தெரிவித்தது.

 தனது நாட்டுப் பிரஜை ஒரு தவறை செய்தால் அதை கண்டுகொள்ளாமல் இருப்பதும், தண்டிக்காமல் இருப்பதும் மாமியார் உடைத்தால் மண்குடம்; மருமகள் உடைத்தால் பொன் குடம் என்பது போல் உள்ளது அமெரிக்க அரசின் நிலை

'ஒருவரை பாரபட்சப்படுத்தக்கூடிய பகைமையை அல்லது வன்முறைகளை தூண்டக்கூடிய இன,மத தேசிய ரீதியிலான தூண்டுதல்களாக அமையும் சகல நடவடிக்கைகளும் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று ஜக்கிய நாடுகள் சபையின் சமய வாதத்தின் 20 சரத்து செல்லுகிறது. இவ்வாறான சட்டங்களும், நீதிகளும் அமெரிக்கா அரசுக்கு மட்டும் விதி விளக்கானதா என்பது புறியாத புதிராகவே உள்ளது. காரணம் அமெரிக்காவில் வெளியிடப்பட்ட திரைப்படம் இன்றும் (you tube) இணையத்தளத்தில் இருந்து நீக்ப்படாமையாகும்.....



1 comments:

THUVARAA said...

Thodarnthum Ithu ponra panikalai thodara Vazthukal