உலகலாவிய ரீதியில் எல்லா மொழி வாசகர் மத்தியிளும் பிரபல்யம் பெற்றவர்தான் மிஸ்டர் டின் டின். முழுமையாகமழித்த முகம். பிரமிட் போல உயர்ந்து நிற்கும் முன் தலைமுடி, இவர்தான் டின் டின், அவரோடு சகாவாக இருப்பவர்தான் கப்டன் ஹெடொக். கூடவே ஸ்னோவி என்ற நாய்க்குட்டி.
உலகில் 50 மொழிகளில் இந்த 'டின் டின்' னின் சாகசம் இன்று அனைவராளும் பேசப்படுகிறது. குறிப்பாக இலங்கையிளும் 'டின் டின்' கதையொன்று தொடராக ஒளிபரப்பாகி வருகின்றது. 'டின் டின்' னின் சாகசங்கள் (The Adventures of Tintin)) என்ற பெயரில் சிறுவர் கார்டூன் படக் கதைகளாக வெளிவந்த இந்த நூல்கள் எடுத்த எடுப்பிலேயே 40 ஆயிரம் பிரதிகள் விற்றுத் தீர்த்தன.
'டின் டின்' சாகசக் கதைகளின் படைப்பாளி ஹேர்ஜே (Herge)பிரேஸில் நாட்டைச் சேர்ந்தவர். அவர் படைத்த 'டின் டின்' உலகலாவிய ரீதியில் வலம் வருவார் என்று அவர் எதிர் பார்க்கவில்லை. சுpரித்த முகமும் வெட்க சுபாவமும் கொண்ட ஹேர்ஜே இத்தகைய துணிகரமான பாத்திரமொன்றை உருவாக்குவார் என்றும் எவரும் எதிர்பார்க்கவில்லை. 'டின் டின்' உலகப் பாத்திரமாகவலம் வர மற்றுமொறு காரணமும் இருந்தது.
உலகில் உள்ள எல்லா பண்பாட்;டுப் பிரதேசங்களிலும் இந்த துப்பறியும் நிபுணர் சென்று வந்தார். Tin Tin in America என்ற கதைகளில் செவ்விந்தியக் கலாசாரச் சூழல் சித்தரிக்கப்படுகின்றது.
Cigars of the Pharaoh இதில் எகிப்திய பிரமிட்கள் சம்பந்தப்படுகின்றன. ஹேர்ஜேதிபெத்தின் பனிமுகடுகளையும் விட்டு வைக்கவில்லை. Tin Tin In Tibet என்ற நூலும் உண்டு. ஆழ் கடல்கள், வறண்ட பாலை நிலங்கள், அடர்ந்த காடுகள் மட்டுமன்றி விண்வெளியினையும் அவர் தனது கதைகளுக்கு களங்களாக்கியுள்ளார்.
இராணுவத்தில் கொஞ்சம் காலம் கடமையாற்றிய ஹேர்ஜே கத்தோலிக்கப் பத்திரிகையொன்றில் 'மூன்று சிறுவர்களும் பன்றிக்குட்டிகளும்' என்ற சிறுவர் கார்ட்டூன் தொடரைப் படைத்து வந்தார். இதன் பின்புதான் 'டின் டின்' தொடரை ஆரம்பித்தார். பெல்ஜியம் 'ரேமன்ட்' வெளியீட்டாளர்கள் ஹேர்ஜே 'டின் டின்' னை நூலாக வெளியிடமுன் வந்தனர். 1946 இல் 'ஏழு பளிங்கு உருண்டைகள்' 'சூரியனின் கைதிகள்' என்பன வெளிவந்தன. ஓவ்வொன்றும் 60 ஆயிரம் பிரதிகள் விற்பனையாயிற்று. உற்சாகமடைந்த ஹேர்ஜே பிரத்தியேக ஸ்டூடியோ ஒன்றை உருவாக்கினார். பெரிய நகரங்கள், விமானங்கள், வாகனங்கள், பல்வேறு காட்சிகள் சார்ந்த படங்கள் சேகரிக்கப்பட்டு அங்கே தொங்கவிடப்பட்டன . ஏழு சிறந்த ஓவியர்கள் உதவிக்கு அமர்த்தப்பட்டனர். இதைத் தொடர்ந்து 'டின் டின்' சம்மந்தமான ஏராளமான சாகச நூல்கள் உலகலாவிய ரீதியில் பரவிவந்தன.
'சுறாக்களின் ஏரி', 'நீலத்தாமரை', அமெரிக்காவில் 'டின் டின்' ஆகிய மூன்று நூல்களும் சிங்களத்தில் வெளிவந்துள்ளன. இலங்கை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இரண்டு தொடர்களையும் பிரபல திரைப்பட இயக்குனர் டைட்டஸ் தொட்டவத்தை மொழிமாற்றம் செய்துள்ளார். 'டின் டின்' கார்டூனானது உலகலாவிய ரீதியில் சிறுவர் முதல் பெரியேர் வரை அனைவரது உள்ளத்தையும் கவர்ந்த ஒரு படைப்பாகும்....
0 comments:
Post a Comment