title

.

முகப்பு

Tuesday, January 6, 2015

இலுமினேடி மர்மக் குழு ஓர் பார்வை



பலரால் அறியப்படாததும்.. ஆனால், சுய சிந்தனை வாதிகளால் அறியப்பட எத்தனிக்கும் ஒரு குழுமத்தின் அடையாளம் என்றே இந்த  .IIIuminati.. ஐக்கூற வேண்டும்.


'உலகின் புதிய கட்டளை (New World Order) எனவும் இந்த குழுவின் செயற்பாடுகள் அறியப்படுகிறது. எனினும் இவை புதிய கட்டளைகள் அல்ல... மிக நீண்ட காலமாகவே நடை முறைப்படுத்த திட்ட மிட்டு செயற்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு தந்திரமாகும். 20 ஆம், நூற்றாண்டுகளில் இதன் வளர்ச்சி தொழில் நுட்ப வளர்ச்சியுடன் அதிகரித்திருக்கின்றது.

தற்சமையம் நடந்து கொண்டிருக்கும் யுத்தங்கள், கலவரங்கள், அரசியல் மாற்றங்கள் எல்லாமே குறிப்பிட்ட ஒரு சில மனிதர்களால்த்தான் நடாத்தப்படுகின்றது. அவர்கள் தான் உலகின் 'கிங் மேக்கர்'களாக இருகிறார்கள்.

யார் இவர்கள்...

நான் அறிந்து கொண்டதன் படி உலகில் 13 குடும்பங்களை சேர்ந்த நபர்களாலேயே இந்த திட்ட மிடல்கள் நடாத்தப்படுகின்றன. 13 குடும்பங்கள் என்பது... ஆயிரம் ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்டது... இப்போது அதன் அங்கத்தவர்கள் கணிசமாக உலகெங்கும் வாழ்கிறார்கள். இவர்கள் வேற்று குடும்பங்களுடன் உறவுகளைப் பேணுவதில்லை. காரணம், தமது IIIuminati  தன்மைக்குரிய மரபணுக்களைப் பேணுவதற்காகத்தான்.
மேலும் இவர்கள் தங்களை வெளிப்படுத்துவதும் இல்லை.


இவர்களின் நோக்கம்தான் என்ன..

'ஒரு உலகம்.. ஒரு அரசு' என்பது தான் இவர்களின் நீண்டகாலத்திட்டம். இந்த திட்டம் நடை பெற வேண்டுமானால்... சுய சிந்தனை வாதிகள் ஒதுக்கப்பட வேண்டும். இவர்களுக்கு எதிரா னவர்கள்... அல்லது நோக்கத்துக்கு இடையூறாக இருப்பவர்கள் இல்லாமல் போக வேண்டும்...
இதைத்தான் பல்வேறு முறைகளில் நடைமுறப்படுத்திவருகின்றனர்... அதில் பலதில் வெற்றியும் கண்டுள்ளார்கள்.

உதரணமாக...
சில வகை 'இசை' வெளியீடுகளை ஊக்குவித்து இளம் சமுதாயத்தை அதனுள் கட்டுப்படுத்த வைப்பது இவர்களின் ஒரு திட்டம்.... அது கணிசமான அளவு வெற்றியளித்துள்ளது. மேலும், பல வகை சினிமாக்களின் மாய உலகத்தினுள் அடக்கி வைப்பதும் வெற்றியளித்துள்ளது.
முடிவில்... இவர்கள் நினைத்தால், எங்கோ இருக்கும் ஒருவரின் நடவடிக்கைகளை ஒரு நிமிடத்தில் கட்டுப்படுத்த வைக்க வேண்டும் என்பதே இறுதி இலக்கு. அதாவது... அடிமைப்படுத்த வேண்டும் என்பது.. எனினும் அவர்களுக்கு உரிய தேவைகள் நிறை வேற்றிக் கொடுக்கப்படும்... மேலதிகமாக சிந்திக்கவோ.. கிளர்ச்சி ஏற்படுத்தவோ முனைபவர்கள் உலகிற்குத் தேவை இல்லாதவர்களாக கணிக்கப்பட்டு... நீக்கப்படுவார்கள்-ஒழிக்கப்படுவார்கள்.
ஒரு குறிப்பிட்ட கட்டுப்பாட்டுக்கு அடங்கி வாழ்பவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.

0 comments: