title

.

முகப்பு

Tuesday, January 13, 2015

தலைமுறைகள் - தமிழுக்கு கொடுத்த தலைவணக்கம்




எட்டு ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் பாலுமகேந்திரா இயக்கியுள்ள படம் தான் 'தலை முறைகள்'.   இது இவர் இயக்கத்தில் வெளிவரும் இருபத்தி இரண்டாவது திரைப்படம். இப் படத்தை  சசி குமாரின் கம்பெனி புரொடக்சன் நிறுவனம் தயாரிதுள்ளது. இப் படத் தில் முக்கியமான கதாபாத்திரத்தில் பாலு மகேந்திராவே நடித்துள்ளார்.

சென்னை, (டி.என்.எஸ்) பல வருடங்களுக்கு முன்பு பாலும கேந்திரா, இயக்கத்தில் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பான கதையின் நேரம் தொடரில், பாலுமகேந்திரா சொல்ல மறந்த கதை ஒன்றை தற்போது 'தலைமுறைகள்' என்ற தலைப்பில் திரைப்படமாக இயக்கியுள்ளார்.

அப்பாவை எதிர்த்துக்கொண்டு கிறிஸ்துவ மதப் பெண்ணை திருமணம் செய்துகொள்கிறார் சசி. இவரும், இவருடைய மனைவியும் சென்னையில் பெரிய மருத்துவர்களாக இருக்கிறார்கள். திடீரென்று கிராமத்தில் உள்ள சசியின் அப்பாவான பாலுமகேந்திராவுக்கு திடீர் உடல் நிலை சரியில்லாமல் போக, சசி, தனது மனைவி மற்றும் பிள்ளையுடன் கிராமத்திற்குப் போகிறார்.


காதல் திருமணம் செய்து கொண்டதால், சசியை வெறுக்கும் பாலுமகேந்திரா, தனது பேரனைப் பார்த்ததும், அனைத்தையும் மறந்து அவர்களை ஏற்றுக்கொள்கிறார். இதற்கிடையில் வீட்டில் அப்பா - அம்மா இருவரும் ஆங்கிலமே பேசுவதால், பையனுக்கு தமிழ் ஓரளவுதான்  தெரியும். அதே போல, தமிழ் வாத்தியாரான பாலும கேந்திராவுக்கு ஆங்கிலம் ஓரளவு தான் தெரியும். இந்த இருவரும் தங்களுடைய  மொழிகளை வைத்துக்கொண்டு எப்படி பழகுகிறார்கள். தாத்தாவிடம் இருந்து பேரன் கற்றுக்கொண்டது என்ன என்பதுதான் படத்தின் முடிவு. வித்தியாசம், நவீன தொழில்நுட்பம், விறுவிறுப்பான காட்சிகள் என்று சினிமா வேகமாக பயணிக்க, தனது பொருமையான பயணத்தை பாலுமகேந்திரா மீண்டும் தொடங்கியிருக்கிறார்.

வியாபார ரீதியிலான படம் இல்லை என்றாலும், என்னமோ சொல்லப் போகிறார்கள், என்று ரசிகர்களை எதிர்ப்பார்க்க வைக்கிறது படம்.


நடிகர்கள் அனைவரும் பாலுமகே ந்திராவின் மூலம் தொலைக் காட்சி தொடர்களில் நடித்தவர்கள். அதனால், அவர்களுடைய நடிப்பு, பாலு மகேந்திராவின் படங்களில் கதாபாத்திரங்கள் எப்படி நடிக்குமோ அப்படியே இருக்கின்றன. அதிகமாக பேசவில்லை என்றாலும், அவர்கள் நிற்பது பார்ப்பது என்று, தாங்கள் பாலுமகேந்திரா தயாரிப்புகள் என்று நிரூபித்திருக்கிறார்கள்.

இப்படத்தை தயாரித்த இயக்குநர் சசி, கௌரவ தோற்றத்தில் ஒரே ஒரு காட்சியில் மட்டும் நடித்துள்ளார். பாலுமகேந்திராவின் பேரனாக நடித்துள்ள சிறுவன் கவர்கிறான். கிராமத்து மனிதர்கள், பாதிரியார் என்று படத்தில் உள்ள மற்ற நடிகர்ளும் இயல்பாகவே வந்து போகிறார்கள். கமராவுக்கு பின்னால் நடித்துக்கொண்டிருந்த பாலுமகேந்திரா, முதல் முறையாக இப்படத்தில் கேமராவுக்கு முன்னால் நடித்துள்ளார்.

ஒளிப்பதிவு, இயக்கம், படத்தொகுப்பு என அனைத்துமே பாலுமகேந்திரா தான். பிலிமில் படம் எடுத்துக்கொண்டிருந்த பாலுமகேந்திரா முதல் முறையாக டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாறியிருக்கிறார். இருப்பினும் அவருடைய அதே பாணி இந்த படத்திலும் தெரிகிறது. இருப்பதை அப்படியே காட்டும் பாலுமகேந்திரா, எந்த இடத்திலும் இயல்பு நிலையை மாற்றாமல் காட்சிகளை எதார்த்தமாக படமாக்கியிர்க்கிறார். 35 எம்எம்மில் மீண்டும் காட்சிகளைப் பார்ப்பது வித்தியாசமாக இருக்கிறது..
படத்தில் பாடல்கள் இல்லை, பின்னணி இசை மட்டுமே. தேவை யான இடத்தில் மட்டுமே இளைய ராஜா தனது கைவரிசையை காட்டியிருக்கிறார். மற்ற இடங்களில் செடி, நீர் உள்ளிட்ட இயற்கை சப்தங்களை நிறப்பியிருக்கிறார்.

நமது அடுத்த தலை முறைகளுக்கு நாம் எதை சொல்லிக் கொடுக்க வேண்டும், அவர்களுக்கு யார் எதை சரியாக சொல்லிக் கொடுப்பார்கள் என்பதை இப்படத்தின் மூலம் சொல்லியிருக்கும் பாலுமகேந்திரா, ஜாதி என்பதை அடுத்த தலைமுறைகளுக்கு சொல்லிக் கொடுக்க கூடாது என்பதை, தனது கதாபாத்திரத்தின் மூலமாகவே மிக அழுத்தமாக சொல்லியிருக்கும் இடம் சிறப்பாக அமைந்துள்ளது., 

ஜாதி, மத மற்றும் ஆணாதிக்க சிந்தனை கொண்ட கடந்த தலைமுறை தாத்தாவை, பேரன் சுத்தப்படுத்தும் கதை. தாத்தாவுக்கு பேரன் மனிதத்தை போதிக்க, பேரனுக்கு தாத்தா மொழியையும், பண்பாட்டையும், கிராமத்தையும் போதிக்க, இப்படியான கொடுக்கல் வாங்கலை அடுத்த தலைமுறைக்கு தந்திருக்கும் படம். வைராக்கியமிக்க முதியவராக பாலுமகேந்திரா வாழ்ந்திருக்கிறார்.

 வார்த்தைகளை வெட்டி வெட்டி பேசும் அவரது இயல்பான பேச்சு, அந்த கதா பாத்திரத்துக்கு யதார்த்த மாகப் பொருந்துகி றது. பேரனை முதன் முதலில் காணும் அந்த தருணத்தில் அவனுக்குள் தன்னைத் தேடும் அந்த பார்வை, அவனுக்கு தமிழ் தெரியவி ல்லை என்பதை அறிந்து தலையில் அடித்துக் கொள்ளும் சோகம், தூங்கும் பேரன் கையில் இருக்கும் மிட்டாயை எடுத்து தின்னும் குழந்தைதனம் என படம் முழுக்க கைபிடித்து அழைத்துச் செல்கிறார்.

 அழகும், வெகுளித்தனமுமாக கவர்கிறான் கார்த்திக்.  முதன் முதலில் ஆற்றை பார்க்கும் ஆவல், கிராமத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் ஆச்சர்யத்தோடு எதிர்நோக்கும் பார்வை, நீயும் செத்துடுவியா தாத்தா என்று கலங்கும்போது நம்மையும் கலங்க வைத்துவிடுகிறான். வடநாட்டு கிறிஸ்தவ மருமகள் கேரக்டரில் ரம்யா சங்கர் கச்சிதமான நடிப்பை தந்திருக்கிறார். பாலுமகேந்திராவின் மகளாக வரும் வினோதினி கிராமத்து தங்கச்சிகளை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். காட்சிக்குள் வராத அந்த இரண்டாவது மனைவி கேரக்டரும் காட்சிக்குள் வரும் மகள் கேரக்டரும் யதார்த்தமான பதிவு.

தந்தையை மீறவும் முடியாமல், தவிர்க்கவும் முடியாமல் தவிக்கிற தவிப்பை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார் சஷிகுமார். பாலும கேந்திராவின் ஒளி ஓவியத்துக்கு தனது ஒலியால் வண்ணம் சேர்த்திருக்கிறார் இளையராஜா. காக்கைகளின் சத்தமும், குயில்களில் பாட்டுமே அதிக காட்சிகளில் பின்னணியாக ஒலித்திருப்பதும், பல காட்சிகளில் இசை மவுனமாகி இருப்ப தும் படத்தை கவிதையாக்கி இருக்கிறது.

 பேரன் பெயருக்கு பின்னால் ஜாதி பெயரை சேர்த்த பாலுமகேந்திராவிடம், நீ இந்து குடும்பத்துல பிறந்ததால இந்துவா இருக்கே. நான் கிறிஸ்தவ குடும்பத்தில பிறந்ததால கிறிஸ்தவனா இருக்கேன். இந்த அழுக்கு நம்மோட போகட்டுமே. அதை ஏன் அடுத்த தலைமுறைக்கு கொடுக்குற? என்று அந்த பாதிரியார் கேட்பது இந்த தலைமுறைக்கான பெரும் கேள்வி.

மருமகள் 8 கிலோ மீட்டர் நடந்து சர்ச்சுக்கு போகிறாள் என்பதற்காக ஏசு படத்தை பூஜை அறையில் மாட்டி இங்கேயே கும்பிட்டுக்கம்மா என்று சொல்வது, அ எழுத கற்றுக் கொள்ளும் பேரன் அதை உச்சா போயி எழுதிப்பார்ப்பதும், அதையே தானும் செய்து பார்ப்பது மாதிரியான பாலுமகேந்திரா கதை நுட்பங்கள் நிறைய இருக்கிறது. திருப்பமோ, பரபரப்போ இல்லாத கதை என்றாலும் காட்சிகளாலும் வசனங்களாலும் சுவாரஸ்யப்படுத்தியிருக்கிறார் பாலுமகேந்திரா. ஆனால் தாத்தாவும் பேரனும் ஆறு, குளம், தோட்டம் என சுத்துவது குழுந்தைகளுடன் விளையாடுவது என்று அடிக்கடி வரும் காட்சிகள் கொஞ்சம் அலுப்புத் தட்டத்தான் செய்கிறது. ஆனாலும் இப்படியொரு படத்தை உருவாக்கிய பாலுமகேந்திராவும் அதை தயாரித்த சசிகுமாரும் பாரட்டப்பட வேண்டியவர்கள்.

பெரும் ஒளிப்பதிவாளர், எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் இயக்குநர்... எனபண்முகங்கொண்ட பாலுமகேந்திரா, முதன்முதலாக நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம். 'தலைமுறைகள்! அவரே, இயக்குநர் எம்.சசிகுமாருடன் இணைந்து தயாரித்திருப்பதுடன் வழக்கம்போல ஒளிப்பதிவும் செய்து இயக்கியும் இருக்கும் இப்படத்தில் விசேஷம்... விழா வேத்திகளில் மட்டுமின்றி வீட்டிற்குள்ளேயும் கூட இதுநாள் வரை தொப்பியுடன் வாழ்ந்து, திரிந்த பாலுமகேந்திரா, தன் தொப்பியை தரமான தமிழ் சினிமாக்களின் தலைக்கு மணிமகுடமாக சூடிவிடும் முகமாக வெறும் தலையுடன் நடித்து 'தலைமுறைகள் படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவுக்கு ராஜமரியாதை சேர்த்திருக்கிறார் என்றால் மிகையல்ல!

பேரனும் தாத்தா கற்றுத்தந்த தமிழுடன் தாத்தாவையும் மறக்காமல், தமிழையும் மறக்காமல் பெரும் எழுத்தாளனாக எம்.சசிக்குமாராக உருமாறி 'தாத்தாவும் நானும் எனும் நாவல் எழுதி பெரும் விருது பெற இனிதே நிறைவடைகிறது தலைமுறைகள்!



0 comments: